ஐபேட் விவகாரம்: தற்காப்புப்படை முன்னாள் இயக்குநர் ஜெகநாதன் ராமசாமி விடுவிப்பு

இரண்டு ஐபேட் சாதனங்களைத் தவறாக கையாண்டதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சென்ற ஆண்டில் 10 வார சிறைத்தண் டனை விதிக்கப்பட்ட முன்னாள் மூத்த அரசாங்க சேவையாளர் ஒருவர் நேற்று அக்குற்றச்சாட்டு களிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திர மனிதராக நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் தொழில்நுட்பத் துறை இயக்குநராக இருந்தவர் ஜெக நாதன் ராமசாமி, 65. என்சிஎஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 2011ல் தன்னிடம் கொடுத்த இரண்டு ஐபேட் சாதனங்கள் தனக்காக தான் வாங்கியவை என்றும் அவற்றுக்குத் தான் பணம் தர வேண்டியிருந்தது என்றும் விசார ணையின்போது திரு ஜெகநாதன் தெரிவித்து வந்தார்.

இரண்டு ஐபேட் சாதனங்களில் ஒன்றை அவர் தன் மகளுக்கு கொடுத்திருந்தார். மற்றொன்றை குடிமைத் தற்காப்புப் படையில் அப்போது அவசர சேவைத் துறை மூத்த இயக்குநராக இருந்த ஒரு வரிடம் $200க்கு விற்றார். ஐபேட் ஒவ்வொன்றின் விலை $939. நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக ஜெகநாதன் மீது அரசினர் தரப்பு இரண்டு குற்றச் சாட்டுகளைச் சுமத்தியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்காக என்சிஎஸ் நிறுவனம் கையடக்கச் சாதனச் செயலிகளை உருவாக்கி வந்ததாகவும் அந்தச் செயலிகளைச் சோதித்துப் பார்ப் பதற்காகவே அந்த இரண்டு ஐபேட் களும் ஜெகநாதனிடம் கொடுக்கப் பட்டன என்றும் அரசினர் தரப்பு வாதிட்டது.

நீதித்துறை ஆணையர் சி கீ ஓன் குற்றச்சாட்டுகளிலிருந்து திரு ஜெகநாதனை விடுவித்தார். அரசினர் தரப்பிலும் தற்காப்புத் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகளும் குறைபாடுகளும் இருப்பதாகத் தனது தீர்ப்பில் ஆணையர் குறிப் பிட்டார். திரு ஜெகநாதனுக்கு எதிரான வழக்கில் பல சந்தேகங் கள் கிளம்பி இருப்பதாகவும் அதனால் அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பை நிலைநாட்டுவது இயலாதது என்றும் நீதிபதி குறிப் பிட்டார். ஐபேட்களில் எந்தச் செயலியும் ஏற்றப்பட்டிருக்க வில்லை என்பதை ஆணையர் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

ஐபேட் சாதனத்தை தவறான வழியில் திரு ஜெகநாதன் பெற்றி ருந்தார் என்றால் அதை அவர் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க் கும் மூத்த அதிகாரியிடம் விற்க வேண்டிய அவசியம் இல்லை என் பதையும் ஆணையர் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் திரு ஜெகநாதன் சார்பில் வழக்கறி ஞர் சஞ்சிவ் ராஜன் முன்னிலை யானார். குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டதையடுத்து திரு ஜெகநாதனை அணுகியபோது “நீதி வென்றிருக்கிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார். திரு ஜெக நாதன் 2012ல் குடிமைத் தற்காப்புப் படையை விட்டு விலகிவிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ