தீபாவளியை முன்னிட்டு சாலைகள் மூடல்; போக்குவரத்து அதிகரிக்கலாம்

தீபாவளி சந்தையை முன்னிட்டு நாளை மாலை 4 மணி முதல் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும். சிராங்கூன் ரோட்டிற்கு இடைப்பட்ட பர்மா ரோடு, பெர்ச் ரோடு, ஃபேரர் பார்க் ஸ்டேஷன் ரோடு ஆகியவை சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மூடப்படும். இந்த சாலைகளைப் பயன்படுத்த போலிஸ் வாகனங்களுக்கும் அவசர சேவை வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு வாகனமோட்டிகளுக்கு போலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

வார இறுதியில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக நாளையும் வரும் திங்கட்கிழமையும் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. இரு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நிலைமையை அறிந்துகொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்குமாறும் பயணிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.