குடும்பநல மருத்துவரைக் கரம் பிடித்தார் அம்ரின் அமின்

உள்துறை அமைச்சின் நாடாளுமன் றச் செயலாளர் திரு அம்ரின் அமினின் திருமணம் நேற்று சுல்தான் பள்ளிவாசலில் நடந்தேறி யது. 38 வயதாகும் திரு அம்ரின் குடும்பநல மருத்துவரான 30 வய தாகும் டாக்டர் ஷரிஃபா நடியா அல்ஜுனிட்டின் கரம் பிடித்தார். சுல்தான் பள்ளிவாசலில் திரு மண பதிவு சடங்கு நிறைவு பெற் றதும் அவர்கள் இருவரும் மோதி ரங்களை மாற்றிக் கொண்டனர். தனிப்பட்ட இந்தத் திருமண விழாவில் அந்தத் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அவர்களில் முன்னாள் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு ஹவாசி டயிப்பியும் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாமும் அடங்குவர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள பாடி எட் புஸ்சோரா மலாய் உணவகத்துக்குச் சென்று விருந் துண்டனர். புதுமணத் தம்பதிகள் இன்றும் நாளையும் தங்கள் திருமண விருந்தை இயோ சூ காங்கில் உள்ள அடித்தள மன்றத்தில் நடத்துகிறார்கள். செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன் னாள் நிறுவன வழக்கறிஞருமான திரு அம்ரின் தனது ஃபேஸ்புக்கில் தங்களுக்கு வாழ்த்துகளைச் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதுமணத் தம்பதிகள் அம்ரின் அமின் (இடது), மனைவி டாக்டர் ஷரிஃபா நடியா அல்ஜுனிட். படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!