சிங்கப்பூரின் முன்னோடி தலைவர் ஒத்மான் வோக்குக்குத் தலைவர்கள் புகழாரம்

"உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்" என்று காலம் சென்ற ஒத்மான் வோக்கிற்கு சிங்கப்பூர் தலைவர்கள் புகழாரம் சூட்டி இருக்கிறார்கள். அதிபர் முதல் அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரும் சமூக ஊடகத்தில் திரு ஓத் மானுக்குப் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். திரு ஒத்மான் சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அச்சப்படாத தலைவர் என்றும் உண்மையான பெரிய மனிதர் என்றும் சமூக ஊடகத்தில் அவர் கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரை நிறுவிய தலை வர்களில் ஒருவரான திரு ஓத்மானின் தியாகங்களும் கடும் உழைப்பும் சிங்கப்பூரின் வெற்றிக்கு உதவியதாக அதிபர் டோனி டான் கெங் யாம் ஃபேஸ்புக்கில் தெரி வித்து இருக்கிறார். "சிங்கப்பூர் சிரமமான காலத்தை எதிர்நோக்கியபோது திரு ஒத்மான் தன் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தார். மற்றவர் களுக்கு உதவுவது, பாரபட்சம் பாராதது, சேவையில் நேர்மை எல்லாம் திரு ஓத்மானின் தனித் தன்மையாக இருந்தன," என்று அதிபர் குறிப்பிட்டார்.

தொழிலாளர் இயக்கத் தலை வரும் பிரதமர் அலுவலக அமைச்ச ருமான சான் சுன் சிங், சிங்கப் பூரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மிக முக்கிய முன்னோடி உறுப்பினர் என்று திரு ஓத்மானை ஃபேஸ்புக்கில் வர் ணித்துப் புகழாரம் சூட்டினார். "பல இன சிங்கப்பூருக்காக திரு ஒத்மான் கடுமையாக பாடுபட் டார். சமூக நல்வாழ்வு, முஸ்லிம் விவகாரங்கள், தேசிய விளை யாட்டு மேம்பாடு போன்ற துறை களில் அவர் பெரும் பணி ஆற்றி னார்," என்று திரு சான் குறிப் பிட்டார்.

மறைந்த திரு ஒத்மான் வோக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்றிரவு அவரது இல்லத்துக்குச் சென்ற பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) அவருக்கு அருகில் (இடது) அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம். அருகில் திரு ஒத்மான் வோக்கின் உறவினர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!