சென்னையில் வெயில்; மதுரையில் இடி, மின்னல் தாக்கி ஐவர் பலி

மதுரை: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மழை எட்டிப் பார்த்தது. எனினும் இடி மின்னல் தாக்கியத்தில் அங்கு 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த வர்களில் ஒரு பெண்ணும் சிறுவனும் அடங்குவர். நேற்று முன்தினம் புளியம்பட்டியைச் சேர்ந்த 45 வயதான சங்கர்ராஜ் காட்டில் விறகு வெட்டிய பின்னர் வீடு திரும்புகையில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதே போல் அகத்தாபட்டியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சுபாஷ் செவ்வாய்க்கிழமை மாலை நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கையில், இடி இடித்தது. அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சிறுவன் உயிரிழந்தான். கரிசல் காளான்பட்டியைச் சேர்ந்த சூராயி (40 வயது) ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிப் பலியானார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!