ஞாபகமறதி நோயுள்ள மருத்துவர் கொடுத்த $3 மில்லியனை திருப்பிக் கொடுக்க உத்தரவு

டிமென்‌ஷியா எனும் முதியோ ருக்கான ஞாபகமறதி நோயாளி டாக்டர் ஃபிரேடா பால் பரிசுகள் கொடுப்பதாக எண்ணி மூவ ருக்கு $5 மில்லியன் தொகையை அளித்தார். அது அவரது மோச மான ஞாபகமறதியைத் தெளிவா கக் காட்டின என்று உயர் நீதி மன்றம் நேற்று தெரிவித்தது. சுயநினைவின்றி அவர் கொடுத்த அந்தத் தொகைகளை அதைப் பெற்றவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலஞ்சென்ற மருத்துவரிடமிருந்து $2 மில்லியன் பெற்ற குழந்தைவேலு மலையபெருமாள் (இடது), கிட்டத்தட்ட $1 மில்லியன் பெற்ற கோபால் சுப்பிரமணியம். படங்கள்: சாவ் பாவ், ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்