சருமத்தை வெண்மையாக்கும் களிம்பில் அதிகளவு பாதரசம்

சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘ராயல் எக்ஸ்பர்ட் வைட்டனிங்’ களிம்பில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 3,000 மடங்கு அதிகமாகப் பாதரசம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் களிம்பை வாங்கவேண்டாம் என்றும் பயன்படுத்தவேண்டாம் என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்தக் களிம்பை இணையம் வழி விற்கப்படுகிறது. சருமத்தை வெண்மையாக்கும் தன்மையையும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கும் தன்மையையும் இந்தக் களிம்பு கொண்டுள்ளதாக இதை விற்கும் நிறுவனம் கூறியிருந்தது. இந்தக் களிம்பை வாங்கியவர்கள் அதைப் பயன்படுத்தாமல் உடனடியாக அதை வீசிவிடவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பாதரசம் அதிகமுள்ள களிம்பை அதிக அளவில் பயன்படுத்தினால் சருமப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.