முதுகெலும்பு சிகிச்சை பெறும் முதியோர் அதிகரிப்பு

சாங்கி பொது மருத்துவமனையில் வயது காரணமாக ஏற்படக்கூடிய முதுகெலும்புப் பிரச்சினைக்கு சிகிச்சை நாடும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அந்த மருத்துவமனை யில் 2015 ஜூலையில் தொடங்கப் பட்ட ஒருங்கிணைந்த முது கெலும்பு அறுவை சிகிச்சை சேவை காரணமாக நேரமும் செல வும் குறைவதால் நோயாளிகள் சீக்கிரம் குணம் அடைகிறார்கள். சாங்கி பொது மருத்துவமனை யில் 2016 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோ ருக்கு ஏறக் குறைய 250 முது கெலும்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன-. இந்த எண்ணிக்கை 2014ல் 90 ஆக இருந்தது. பொதுவாக மூப்படையும்போது முதுகெலும்பில் எலும்புகள் தேய் வதால் எலும்பு விலகுவது, எலும்பு களை இணைக்கும் தசையில் வீக்கம் போன்றவை ஏற்படுவது உண்டு. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான முதியவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு ஒரே நேரத்தில் அவர்கள் எலும்பு மருத்துவரையும் நரம்பியல் சிறப்பு வல்லுநரையும் பார்த்துவிடலாம்.

சாங்கி பொது மருத்துவமனையில் அதிநவீன முதுகெலும்பு சிகிச்சை சாதனம். இது ஒரு நோயாளியின் முதுகெலும்பை முப்பரிமாண வடிவில் உடனுக்குடன் காட்டக்கூடிய ஆற்றல்மிக்கது. இந்தச் சாதனத்தின் மூலம் மருத்துவர்கள் அதிநவீன முறையில் அறுவை சிகிச்சையை நடத்த முடியும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon