கார் மீது லாரி மோதியது; 61 வயது ஆடவர் காயம்

குலிமார்ட் ரோட்டில் நேற்று அதி காலை நேரத்தில் 26 வயது ஆட வர் ஒருவர் குடிபோதையில் லாரியை ஓட்டிவந்து ஒரு கார் மீது மோதிவிட்டார். அந்தக் காரை ஓட்டிவந்த 61 வயது ஆடவர் காய மடைந்தார். சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். கருப்புநிற கார், ஒரு லாரி, ஒரு மருத்துவ வாகனம், போலிஸ் வாகனங்கள் ஆகியவை சாலைப் பகுதியில் நின்றிருந்ததை காட்டும் ஒரு காணொளி தனக்கு அனுப்பப் பட்டதாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. “குலிமார்ட் ரோடும் குல்மார்ட் கிரசெண்டும் சந்திக்கும் இடத்தில் நேற்று அதிகாலை 4.06 மணிக்கு ஒரு லாரியும் ஒரு காரும் விபத்துக் குள்ளானதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குடித்துவிட்டு லாரியை ஓட்டி வந்ததற்காக 26 வயது ஆடவரை கைதுசெய்திருக் கிறோம்,” என்று போலிஸ் தெரி வித்தது.

குலிமார்ட் ரோட்டில் நேற்று அதிகாலை நேரத்தில் கார் மீது லாரி மோதியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்