டியோ: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை

ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பான தெரிவுகள் குறித்து ஆராய்வதற் காக அமைச்சர்நிலைக் குழு உரு வாக்கப்பட்டதில் வழக்கத்திற்கு மாறாக அல்லது புதிராக எதுவும் இல்லை என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (படம்) விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, அமைச்சர்நிலைக் குழு குறித்த எல்லாம் ரகசியமாக இருக்கிறது என்று பிரதமரின் சகோதரர் திரு லீ சியன் யாங்கும் சகோதரி டாக்டர் லீ வெய் லிங்கும் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், அமைச்சர்நிலைக் குழுவின் தலைவரான துணைப் பிரதமர் டியோ அக்குற்றச்சாட்டை மறுத்தார். உண்மையில், அக்குழு குறித்தும் அதன் பணி வரம்புகள் குறித்தும் அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர் என்று திரு டியோ குறிப்பிட்டார்.

வீட்டை இடிக்கவேண்டும் என்ற தங்கள் தந்தையின் விருப் பத்தை நிறைவேற்றாமல் தடுக்க, தங்களது மூத்த சகோதரர் கேட் டுக்கொண்டபடி அந்த ‘ரகசிய’ அமைச்சர்நிலைக் குழு ஏற்படுத் தப்பட்டுள்ளதாகப் பிரதமரின் உடன்பிறப்புகள் கூறி இருந்தனர். இந்நிலையில், அந்த வீட்டின் பாரம்பரிய, வரலாற்றுப்பூர்வ முக்கி யத்துவம், அந்த வீடு குறித்து திரு லீ கொண்டிருந்த எண் ணங்கள், அவ்வீடு மற்றும் அதன் அக்கம்பக்கம் தொடர்பில் சாத் தியமான திட்டங்கள் ஆகியவை குறித்து ஆராய்வதற்காகத்தான் அமைச்சர்நிலைக் குழு ஏற்படுத் தப்பட்டதாகத் திரு டியோ விளக் கினார்.

“இந்த விவகாரங்கள் அனைத் திற்கும் அரசாங்கமே பொறுப்பேற் கவும் திட்டமிடவும் வேண்டும். இதற்கான செயல்பாடுகளை நாங்கள் இப்போது தொடங்கி இருப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளேன். இது தனிப்பட்ட விஷயமல்ல. இதில் எதுவும் வழக்கத்திற்கு மாறாக அல்லது புதிராக இல்லை. முறையாக, அமைதியாக, நோக் கத்துடன் பணியாற்றும் அரசாங்கத்தின் வழக்கமான செயல்பாடு தான் இது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!