சுடச் சுடச் செய்திகள்

புதிய தம்பதியருக்கு விரைவில் வீடு கிடைக்க வீவக நடவடிக்கை

வாழ்க்கையைப் புதிதாகத் தொடங் கவிருக்கும் தம்பதியர், வீவக வீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அவர்கள் அதுபோன்று இனி காத்திருக்கத் தேவையில்லை. வீட்டுக்காகக் காத்திருக்கும் காலத்தைக் குறைக்கும் வகையில் வீவக, இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய தம்பதியருக்கான விற்ப னைத் திட்டத்தின் அடிப்படையில், விற்பனையின்போது விலை போகாத எஞ்சிய வீடுகளை இந்தப் புதிய விற்பனைத் திட்டத்தின்மூலம் அவர்கள் வாங்கலாம். புதிதாக மணமுடித்தவர்கள், குழந்தை பெற்றவர்கள் ஆகியோருக்கு விரைவில் வீடு கிடைத்து அவர்கள் இன்பமாக வாழ்க்கையைத் தொடங்கும் வகையில் தேசிய வளர்ச்சி அமைச்சு குழு இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது.

முதன்முதல் வீடு வாங்கும் புதிய தம்பதியர் வீட்டுக்காகக் காத்திருக்கும் காலத்தைக் குறைப் பதற்காக வீவக புதிய பிடிஓ வீடுகளைக் கட்டவிருக்கிறது. முதல் கட்டமாக 1,000 வீடுகளைக் கொண்ட புளோக்குகளைக் கட்டு வதற் கான கட்டுமானப் பணிக்கா ன ஏலம் இந்த மாதம் அறி விக்கப்பட்டது. கட்டுமானப் பணி இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

இந்த வீடுகள் முதிர்ச்சிபெறாத வட்டாரங்களான செம்பவாங், செங் காங், யீசூன் ஆகிய இடங் களில் கட்டப்படும். இந்த வீடுக ளுக் கான விற்பனை 2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்படும். 2020ஆம் ஆண்டு நான்காம் காலாண்டு மற்றும் 2021 முதல் காலாண்டு ஆகிய காலக்கட்டத்தில் இந்த வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 இரண்டாம் காலாண்டில் வீட்டுக்குப் பதிவுசெய்வோர் சுமார் இரண்டரை ஆண்டுகளே காத்தி ருக்க வேண்டும். சாதாரணமாக வீட்டுக்குப் பதிவுசெய்வோர் மூன்று அல்லது நான்கு ஆண்டு கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பிடிஓ வீடுகளுக்கான விற்பனை யின்போது விற்பனையாகாமல் எஞ்சியிருக்கும் விடுகளுக்கான விற்பனையும் நடைபெறும். இதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விற்பனையாகாத 1,394 வீடுகள் மீண்டும் விற்பனைக்கு விடப்படவுள்ளன. இந்த விற்பனை யின்போது முதன்முதலில் வீடு வாங்குவோருக்கு 95 விழுக்காடு வீடுகள் ஒதுக்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon