பாலா-அஞ்சல்துறையின் அழியா முத்திரை

திரு பாலா, சுதந்திர சிங்கப்பூரின் முதல் இந்திய/ஆசிய தலைமை அஞ்சலக அதிகாரியாக பணியாற்றியவர்.
அஞ்சலக ஊழியருக்கான தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளராக 1947ல் பொறுப்பேற்றவர். சமூகத் தொண்டில் முன்னோடி.
திரு பாலாவுக்கு வயது இப்போது 101. இவரின் வாழ்க்கை, சிங்கப்பூர் அஞ்சல் துறை வரலாற்றில் அழியா முத்திரையாகப் பதிந்து, காலனித்துவ காலம் முதல் இப்போதைய காலம் வரை பவவற்றையும் கண்ணாடிபோல் காட்டுகிறது.

1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15. ஃபோர்ட் கேனிங் போர்க்கால தலைமைத் தகவல் அலுவலகத்திலிருந்து ஒரு 'டெலிகிராம்' வந்தது. அதைப் படித்துப்பார்த்த அஞ் சலக ஊழியரான திரு எம் பாலசுப்பிர மணியத்திற்கு (பாலா) தூக்கிவாரிப்போட் டது. பிரிட்டிஷ் படைகளின் ராணுவத் தளபதியாக இருந்த பர்சீவல், ஜப்பானியர் களிடம் சரண் அடைந்துவிட்டார் என்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் இருந்த இடத்திலேயே இருக்கவேண்டும் என்றும் வந்த செய்தி கட்டளையிட்டது.

செய்தி அனுப்பியவர் திரு பாலாவின் நண்பரும் சக அஞ்சலக ஊழியருமான திரு ஜி.கந்தசாமி. உடனே தொலைபேசி மூலம் திரு கந்தசாமியிடம் தொடர்புகொண்டு செய் தியை உறுதிப்படுத்திக்கொண்ட திரு பாலா, அத்தகவலைத் மேலதிகாரியிடம் தெரிவித்தார். அலுவலகத்திலேயே இருக்கவேண்டுமா வெளியே போகலாமா என்ற முடிவை அந்த மேலதிகாரி அவரவர் பொறுப்புக்கே விட்டுவிட்டார்.
முண்டா பனியனுடன் இருமாத சம்பள முன்பணமும் கொடுத்துவிட்டார் மேலதிகாரி. அடுத்த நொடி, சீருடையைக் கழற்றிவிட்டுத் திரு பாலாவும் சக ஊழியர்களும் முண்டா பணியன் அரைக்கால் சட்டை கோலத்தில் வெறுங்காலில் தெருவில் நின்றனர். பணத்தைப் பத்திரமாக கால்சட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டார் திரு பாலா. குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள முடியாமல், எங்கு செல்வது என்பதும் தெரியாமல் கடைசியில் பொது மருத்துவ மனையின் ஊழியர் குடியிருப்பில் இருந்த நண்பர் பொன்னம்பலத்தின் வீட்டில் தஞ்சம் புகுந்தார் திரு பாலா. மூன்று நாட்கள் கழித்தே தமது குடும்பத்தாருடன் அவர் இணைந்தார்.
இப்படி சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சம்பவங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது அவரின் வாழ்க்கை.

திரு பாலாவின் தந்தைத் திரு வி முருகேசு தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட் டத்தின் கும்பகோணம் நகரைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே கப்பல் வழி சிங் கப்பூர் வந்த அவர், சிங்கப்பூருக்கும் அப் போதைய மலாயாவுக்கும் இடையே வர்த்தகம் புரிந்தார். மலாயாவின் காஜாங் பகுதியைச் சேர்ந்த ராஜாம்பாள் எனும் பெண்ணை மணந்தார். 1917ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பிறந்த திரு பாலா தமது பாலர் பருவத்தை பொத்தோங் பாசிர் கம்பத்தில் கழித்தார். பிறகு திரு பாலாவின் குடும்பம் மலா யாவின் சிரம்பான் பகுதிக்குப் புலம்பெயர்ந் தது. அப்போது அவருக்கு வயது ஆறு. அதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிரந்தரமாக சிங்கப்பூரின் சிராங் கூன் ரோடு வட்டாரத்தில் குடியேறியது திரு பாலாவின் குடும்பம். இங்கு அவ ருக்கு இரு தங்கைகளும் பிறந்தனர். அப்போது, முதலில் ஹேஸ்டிங்ஸ் சாலையில் இருந்த தமிழ்ப்பள்ளியில் படித்த திரு பாலா, ஓராண்டுக்குப் பிறகு 1930ஆம் ஆண்டு 'ராயல்; இங்கிலிஷ் ஸ்கூல்' எனும் அரச ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்தார். பின்பு மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்தார்.

அதே 1933ஆம் ஆண்டு ஜூனியர் கேம்ப்ரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1934ல் சீனியர் கேம்ப்ரிட்ஜ் தேர்விலும் 1935ஆம் ஆண்டு 'லண்டன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்' தேர்விலும் திரு பாலா தேர்ச்சிபெற்றார். சேம்பர் ஆஃப் காமர்ஸ் தேர்வில் அவரது பள்ளியிலிருந்து உச்ச தேர்ச்சி பெற்ற ஒரே மாணவர் திரு பாலா. இது 1936ஆம் ஆண்டு தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிலும் வெளியானது.
படிப்பு முடிந்து அஞ்சலகத்தில் நேர் முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று அதே ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அஞ்சலகத் தில் மேலும் 11 பேருடன் பணியில் சேர்ந் தார் திரு பாலா. எழுத்தராக $60 மாதச் சம்பளத்திற்குப் பணியைத் தொடங்­கிய திரு பாலா, வேலை முடியும் வரை நின்றுகொண்டே இருக்க வேண்டும் என்றும் அதுவே மிகவும் சிரமமான ஒன்று என்றும் கூறினார்.
அப்போது பெரிய தள்ளுவண்டிகளில் வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் அஞ்சல் தலை உள்ளதா என்று சரி பார்த்த பின் அவற்றை 48 'புறா கூண்டு களில்' (pigeon holes) பிரிக்கவேண்டும்.


ஓராண்டில் அஞ்சலகத்தின் பல பிரிவு களிலும் பணிபுரிந்த திரு பாலா, படிப்படி யாக டெலிகிராஃப் பிரிவிலும் பயிற்சி பெற்று மோர்ஸ் கோட் எனும் சமிக்ஞை முறையையும் கற்று கைதேர்ந்தவரானார்.
1942ல், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், திரு பாலாவும் மற்ற சில அஞ்சலக ஊழியர்களும் வழக்க மான பணியிலிருந்து நீக்கப்பட்டுப் பிரிட் டிஷ் ராணுவத்தில் தகவல், சமிக்ஞை பிரிவில் பணியாற்ற அனுப்பப்பட்டார்கள்.
ராணுவ முகாம் வாழ்க்கை சிரமமாக இருந்தது. ஆனால் அங்குதான் திரு பாலாவின் சக ஊழியரும் நண்பருமான திரு ஜி. கந்தசாமியும் பயிற்சிபெற்றார்.

பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானியர்களிடம் வீழ்ந்துவிட்டது என்று செய்தி வந்தபோது திரு பாலா கிரேஞ்ச் ரோடு முகாமில் இருந்தார். திரு கந்தசாமி ஃபோர்ட் கேனிங் தளபத்திய முகாமில் இருந்தார். தந்தை மர்ம மரணம் ஜப்பானிய ஆட்சியின்போது 'சியோ னான் நிப்போன் காக்கன்' எனும் சிங்கப் பூரின் முதல் ஜப்பானிய பள்ளியில் சேர்ந்து ஜப்பானிய மொழி கற்றுத்தேர்ந்தார் திரு பாலா. அந்தக் காலகட்டத்தில்தான் இந்திய சுதந்திரத்திற்காகப் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார்.


பாடாங் திடலில் சுபாஷின் உரையைக் கேட்க திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்களில் திரு பாலாவும் ஒருவர். 1943ஆம் ஆண்டு ஜூலை மாதவாக்கில் தாய் லாந்து-பர்மா இடையே பாலம் கட்டும் பணியை ஜப்பானியர்கள் தொடங்கினர். அந்தப் பணியில் திரு பாலாவின் தந்தைத் திரு முருகேசு சேர்த்துக்கொள் ளப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இறுதியாக போர் முடிந்து 1945ஆம் ஆண்டில் மரணப் பாலத்தில் பணிபுரிந்து உயிர் தப்பிய ஒருவர் மூலம்தான், திரு பாலாவின் தந்தைத் தாய்லாந்தில் இறந்து விட்டார் என்ற செய்தி தெரியவந்தது. அப்போது திரு பாலாவுக்கு வயது 28. பிறகு, 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பானியர்கள் பிரிட்டிஷ் படையிடம் சரண் அடைந்தனர். மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியில் பொது அஞ்சலகத்தில் பணி யைத் தொடர்ந்தார் திரு பாலா.


அதன் பின்னர் அஞ்சலக ஊழியர்களுக் கான தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளராக 1947ல் பொறுப்பேற்ற திரு பாலாவுக்கு 1948ல் லண்டனில் மேற்படிப்புப் படிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் உபகாரச் சம்பளம் வழங்கியது. அப்போது பிரிட்டனில் உள்ள அஞ்ச லகத்தில் பணிபுரிந்து பயிற்சி பெற்றார். பின்னர் கோலாலம்பூரின் மத்திய அஞ்சல் பிரிவின் துணைக் கட்டுப்பாட்டு அதி காரியாகப் பொறுப்பேற்றார்.
அஞ்சல்களுக்கான கட்டுப்பாட்டு அதிகாரி, துணை இயக்குநர் என்று பதவி உயர்வு பெற்று 1960ஆம் ஆண்டில் அஞ்சல் பிரிவின் இயக்குநரானார். பின்பு மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து சுதந்திரம் பெற்ற பிறகு சிங்கப்பூரின் முதல் ஆசிய தலைமை அஞ்சலக அதி காரி (postmaster general) ஆனார். திரு பாலா, சிறந்த சேவைக்காக 1965ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் திரு யூசோஃப் இஷாக்கிடமிருந்து உயர்ந்த சேவை விருது பெற்றார். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது கோலாலம்பூரில் இருந்த பல ஆவணங்களை அங்கிருந்து சிங்கப்பூர் அஞ்சல் அலுவலகத்திற்குக் கொண்டு வந்ததுதான் தம் பணியில் மிகவும் சவால் மிக்க ஒன்று என்றார் திரு பாலா.

பல வாகனங்களில் பல அலமாரிகளை ஏற்றி, பல நாட்களுக்குப் பிறகு அனைத்து ஆவணங்களும் வெற்றிகரமாகச் சிங்கப் பூருக்குக் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையே 1971ஆம் ஆண்டு அஞ் சலகத்திலிருந்து ஓய்வு பெற்று சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த திரு பாலா 1985ல் மீண்டும் பணி ஓய்வு பெற்றார். (திரு பாலாவின் அணுக்க நண்பரும் சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னோடி தொழிற்சங்க வாதியுமான திரு கந்தசாமி 1999ல் மரணம் அடைந்தார்).


பேரவையைக் கொண்டு சமூகத் தொண்டு

திரு பாலா, 101, சாதாரண குடும்பத்தில் பிறந்து, தொடக்கக்கால சிங்கப்பூரில் ஏழ்மையைத் தழுவி, இன, சமூக ரீதியான பாகுபாடுகளைப் பார்த்து வளர்ந்தவர். தான் மட்டும் உயராமல் தமது சமூக மும் உயரவேண்டும், நிலையான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணம்கொண்ட சமூகவாதி. ஏற்றத்தாழ்வுகள், வெற்றி, தோல்விகள் எல்லாம் சமமானவை என்று உணர்ந்த சமத்துவவாதி.
திரு பாலா, காற்பந்து விளையாட்டுடன் சமூக சேவையிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 1964ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் திரு பாலா.


இந்திய சமூகம் முன்னேறவேண்டும் என்ற வேட்கை திரு பாலாவிடம் இன்றும் உள்ளது. கல்வி ஒன்றுதான் ஒரு சமூகத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பியவர் இவர். தமிழவேள் கோ.சாரங்கபாணி 1951ஆம் ஆண்டில் தொடங்கிய தமிழர் பிரதிநித்துவ சபையை, இவரது நெருங்கிய நண்பரும் தொழிற்சங்கவாதியுமான திரு ஜி.கந்தசாமி 1980களில் தமிழர் பேரவையாக மறுசீரமைத்தபோது அதில் இவரும் பங்காற்றினார். சிங்கப்பூரில் தனித்தனித் தீவுகளாக இருந்த பல இந்திய அமைப்புகளை ஒன்று இணைத்து இந்திய சமூகத்தின் சமூக, கலாசாரத் தேவைகளைப் பூர்த்தி செய் வதுடன் வசதிக் குறைந்த மாணவர்களுக் குத் தீவின் பல்வேறு பகுதிகளில் இலவச துணைப்பாட வகுப்புகளையும் இந்தப் பேரவை நடத்தி வந்தது.


இந்த அமைப்பு உட்பட 1960களின் தொடக்கத்தில் திரு ஜி. கந்தசாமி தொடங்கிய கல்வி அறநிறுவனத்திலும் (SIET) இணைந்து முக்கிய பங்காற்றினார் திரு பாலா. சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கம்.
ஆங்கில இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட திரு பாலா, இன்றும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தைக் கை விடவில்லை. இவர் இப்போது சிங்கப்பூரின் இந்திய சமூகம் நல்ல வளர்ச்சி கண்டுள் ளது என்று பெருமிதம் கொள்கிறார்.
"நமது அமைச்சரவையில் பல இந்தியர் கள் உள்ளனர். நீதிமன்றம், அரசு, சமூகத் துறைகளில் பல இந்தியர்கள் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.


"இது நமது சமூகத்தின் முன்னேற்றத் தைக் காட்டுகிறது. சிண்டாவின் முயற்சி களும் நல்ல பயனை அளித்து உள்ளன. இருந்தாலும் இன்னும் செய்வதற்கு நிறைய உண்டு," என்று திரு பாலா கருத்துத் தெரிவித்தார். திரு பாலாவின் சுயசரிதை ஆங்கில புத்தகமாக கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. திருவாட்டி நிலஞ்சனா குப்தா எழுதிய "சிங்கப்பூர், மை கண்ட்ரி' (சிங்கப்பூர், எனது நாடு) எனும் அந்தப் புத்தகம் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் அப்போது வெளியிடப் பட்டது.

கண்ணியமும் நேர்மையும்--கப்பலும் படகும்-சுரங்கப்பாதையும் துறைமுகமும்-கலைக் கட்டடமும்

அஞ்சலக ஊழியர்கள் என்றாலே கண்ணியம், நேர்மை முதலியவை மிக முக்கியம் என்கிறார் திரு பாலா.
இதுதான் தான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் தனது மேலதிகாரி தன்னிடத் திலும் சக ஊழியர்களிடமும் கூறிய தாரகமந்திரம் என்றார் அவர். "படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண் டிருந்த நான், அஞ்சலகத்தில் ஆள் சேர்க்கிறார்கள் என்பதை நண்பர் மூலம் அறிந்து தேர்வுக்குச் சென்றேன்.


"திரு பி நேய்லாந்து என்ற வெள்ளைக் கார மேலதிகாரி நேர்காணல் செய்தார். ஒரு கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. வேலை கிடைக்காது என்று நினைத்து வீடு திரும்பினேன். "ஆனால் எனக்கு வேலை உண்டு எனத் தகவல் வந்தது. அஞ்சலக ஊழி யர்கள் என்றாலே கண்ணியம், நேர்மை மிக முக்கியம். அப்போதைய அஞ்சலக ஊழியர்கள் ஆயிரக்கணக்கான கடிதங் கள், பொட்டலங்கள், பணத்துக்கு அவர் களே பொறுப்பு. அன்று அனைத்துப் போக்குவரத்துமே அஞ்சல் வழிதான் நடந்தன," என்று நினைவுகூர்ந்த திரு பாலா, தனக்குப் போதிக்கப்பட்ட அந்தத் தாரக மந்திரத்தை வேலையில் மட்டுமல் லாது வாழ்விலும் இன்றுவரை கடைப் பிடிப்பதாகவும் குறிப்பிட்டார். இப்போது ஃபுல்லர்ட்டன் ஹோட்டலாக இருக்கும் அதே கட்டடம்தான் அன்று ஃபுல்லர்ட்டன் கட்டடமாகத் திகழ்ந்து, சிங்கப்பூரின், இந்த வட்டாரத்தின் அஞ் சலக மையமாக அது சேவையாற்றியது.


அந்தக் கட்டடம் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. "அப்போது சிங்கப்பூருக்கும் மலாயா வுக்கும் அருகில் உள்ள பல பகுதிகளுக் கும் செல்லும் கடிதங்களுடன் பெரிய பொட்டலங்களும் கப்பல் வழி வரும். அவற்றைக் கப்பலிலிருந்து சிறு படகு கள் கரைக்குக் கொண்டுவரும். அப் போது ஃபுல்லர்ட்டன் கட்டடத்துக்கு முன்புறம் இருந்த கிளிஃபோர்ட் கப்பல் துறைமுகத்திலிருந்து நேரடியாக இந்தப் பொட்டலங்கள் ஃபுல்லர்ட்டன் கட்டடத் துக்குக் ஒரு சுரங்கப்பாதை வழியாகக் கொண்டுவரப்படும். "அந்தச் சுரங்கப்பாதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கட்டத் தில் அந்தக் கட்டடம் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் திகழ்ந்தது," என்று பலவற்றையும் திரு பாலா நினைவுகூர்ந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!