மேலும் 200 மின்சார கார்களை வாங்கியது கிராப் சிங்கப்பூர்

கார் பகர்வு நிறுவனமான ‘கிராப் சிங்கப்பூர்’ மேலும் 200 ‘கியுண்டே கோனா’ மின்சார கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரிலேயே ஆக அதிகமான பகிர்வு கார் களைப் பெற்றுள்ள நிறுவனமாக ‘கிராப் சிங்கப்பூர்’ திகழ்கிறது. வாங்கப்பட்ட மின்சார கார் களில் முதல் இருபது கிராப் ஓட்டு நர்களுக்கு வாடகைக்கு விடப் படும். எஞ்சியுள்ள மற்ற கார்கள் ஆண்டு இறுதிக்குள் படிப்படியாகப் பயன்பாட்டுக்கு விடப்படும். கிராப் நிறுவனத்தின் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் ‘சிங்கப்பூர் பவர்’ நிறுவனத்தின் மின்னேற்றிக் கூடங்களைப் பயன் படுத்துவதற்கு 30 விழுக்காடு வரை கட்டணக் கழிவு பெறலாம் என்று ‘கிராப்ரெண்டல்ஸ் சிங்கப் பூர்’ நிறுவனத்தின் தலைவர் திரு காவ் யி மிங் கூறினார். ‘கியுண்டே கோனா’ மின்சார கார்களை வாடகைக்கு எடுக்கும் ஓட்டுநர்கள் நாள் ஒன்றின் வாட கையாக $80 செலுத்த வேண்டும். அது மற்ற வாடகை கார் நிறுவனங் கள் வசூலிக்கும் கட்டணத்துடன் ஒப்பிடக்கூடியது என்று திரு காவ் சொன்னார்.