வருமான வளர்ச்சி மெதுவடைந்தது

சிங்கப்பூரில் வேலை பார்ப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உயர்ந்தது. ஆனால் சிங்கப்பூர் ஊழியர்களின் இடைநிலை வரு­மான வளர்ச்சி 2017ஆம் ஆண்டு­டன் ஒப்பிடுகையில் மெதுவடைந்து உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த அடிப்படையில் வேலைச் சந்தை மேம்பட்டது. கடந்த ஆறு ஆண்டு­கள் இல்லாத அளவில் ஆள் குறைப்பு விகிதம் குறைந்தது.அதுமட்டுமல்லாமல், 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டின் வருடாந்திர சராசரி வேலையின்மை விகிதமும் குறைந்தது என மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

2017ஆம் ஆண்டில் பொரு­ளியல் வளர்ச்சி 3.6 விழுக்காடாக இருந்தது. 
கடந்த ஆண்டு இது 3.3 விழுக்காடாக இறக்கம் கண்ட தாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு முழுநேர வேலையில் இருந்த சிங்கப் பூரர்களுக்குக் கூடுதல் வரு மானம் கிடைத்ததாக மனிதவள அமைச்சின் தரவுகள் காட்டு கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரர்களுக் கான இடைநிலை வருமானம் 3.3 விழுக்காடு உயர்ந்து $4,183 ஆனது.
இருப்பினும், 2017ஆம் ஆண்­டில் 5.9 விழுக்காடாக இருந்த இடைநிலை வருமான வளர்ச்சி­யைவிட இது குறைவு. 

இந்த சம்பளத் தொகையில் முதலாளிகளின் மத்திய சேமநிதி பங்களிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருளியல் விரிவாக்கம் மெதுவடைவதால், வருமான வளர்ச்சியும் மெதுவடைந்துள்ள­தாக டிபிஎஸ் பொருளியல் நிபுணர் எர்வின் சியா தெரிவித்தார். 
பொருளியல் விரிவாக்கம், வருமான வளர்ச்சி ஆகியவை இவ்வாண்டும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டு களில் இடைநிலை வருமான வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 3.6 விழுக்காடாக இருந்தது. அதற்கு முந்திய ஐந்து ஆண்டு களில் இடைநிலை வருமான வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் 1.7 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது. 

குறைந்த வருமானம் பெறும் சிங்கப்பூரர்களுக்கும் உயர் வரு­மானம் பெறும் சிங்கப்பூரர்­களுக்கும் இடையிலான வருமான இடை­வெளி குறைந்து வருகிறது.
இதற்குக் காரணம், கீழ் நிலையில் உள்ள 20 விழுக்காட்டு சிங்கப்பூரர்களின் பணவீக்கத் துக்கு சரிசெய்யப்பட்ட நிகர வருவாய் வேக வளர்ச்சி கண்டது. இந்த வேக வளர்ச்சி ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 4.3 விழுக்­காடாக இருந்தது என்று தெரி­ விக்கப்பட்டது.
வேலை நியமன அடிப்படையில், ஊழியரணி கடந்த ஆண்டு 39,300 கூடியது. இவர்களில் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர­வாசிகள் 28,400 பேர், 10,900  பேர் வெளிநாட்டவர்கள்.

இதில் வெளி­நாட்டுப் பணிப்பெண்கள் சேர்க்கப்­படவில்லை.  

2017ஆம் ஆண்டில் இருந்த நிலையைவிட இது பெரிய மாற்றம். 2017ஆம் ஆண்டில் பணிப் பெண்களைச் சேர்க்காமல் சிங்கப்­பூரில் வேலை செய்த வெளிநாட்ட­ வர்­களின் எண்ணிக்கை 32,000ஆகக் குறைந்தது. கடந்த 15 ஆண்டுகள் இல்லாத அளவில்  சிங்கப்பூரில் வேலை செய்த வெளி­நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் கடந்த ஆண்டு குறைந்தது. இதன் விளைவாக மொத்த வேலை நியமன எண்ணிக்கை முன்னெப்­போதும் இல்லாத அள­வுக்குக் குறைந்தது.

இந்நிலையில், அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் இடையி லான வர்த்தகப் போர் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே கூறினார். நிறுவனங்கள் அவற்றின் உத்தி­களையும் செயல்முறையையும் மாற்றியமைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், இதனால் ஆட்குறைப்பு நிகழக்­கூடும் என்றார் அவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி