மேல்நிலைத் (‘ஏ’ நிலை) தேர்வில் தேர்ச்சி களிப்பில் சக்திவேல்

உடல்நலக் குறைவு காரணமாக சிறு வயதில் பலமுறை மருத்துவர்களை நாடியுள்ள 18 வயது சக்திவேல் குப்புசாமி, எதிர்காலத் தில் மருத்துவராகி சமூகத்திற்கா கச் சேவையாற்ற வேண்டும் என்ற வேட்கையைக் கொண்டுள்ளார். 
வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் 60 வயதான திரு குப்புசாமி நாகப்பன், உடல்நலக் குறைவால் வேலைக்குச் செல்ல முடியாத 59 வயதான திருமதி இந்திராணி ஆகியோரின் ஒரே மகனாகிய சக்திவேல், நேற்று வெளியான பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் (‘ஏ’ நிலை) தேர்வில் அவர் எதிர்பார்த்ததைவிட சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.  

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து இதய சிகிச்சை நிபுணராக வேண்டுமென்ற உறுதியுடனிருக் கிறார் ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி மாணவரான சக்திவேல். 
குறைந்த வருமான குடும்பத் தைச் சேர்ந்த இந்த இளையருக்கு ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி யில் பயில 100% சுயேச்சைப் பள்ளி கல்வி உதவி நிதியும் ராஃபிள்ஸ் கல்வி உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டன. 
கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள சக்திவேல் இணைப்பாட நடவடிக்கைகளிலும் மிளிர்ந்தார். பள்ளியின் இந்தியக் கலாசார மன்றத்தின் தலைவராகத் திறம்பட சேவையாற்றியுள்ளார். அப்போது, அவரது மன்றம் ஏற்பாடு செய்த ‘சங்கமம்’ மேடை நாடகத்தின் தயாரிப்பாளராக, சுமார் 60 பேர் கொண்ட குழுவினரை அவர் வழிநடத்தினார்.

கல்வியிலும் மற்ற நடவ டிக்கைகளிலும் சீரிய கவனத் துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியுள்ள சக்திவேல், பெற்றோரே தமக்கு முழு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கிவந்ததாகக் குறிப்பிட்டார். 
“என் பெற்றோரே என் முன்மாதிரி. நான் பல நேரங்களில் உற்சாகம் இழந்த நிலையில் அவர்களிடமே சென்று எனது சிர மங்களைக் கூறுவேன். எல்லா தருணங்களிலும் என்னைத் தட் டிக் கொடுத்து ஊக்கமளித்த என் பெற்றோரே எனது உலகம்,” என்றார் சக்திவேல். பெற்றோர் மீதான அளவிலா பாசத்தால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத் தில் பயில வாய்ப்பு கிடைத்தாலும் சிங்கப்பூரிலேயே பட்டக்கல்வி பயிலவிருப்பதாகச் சொன்ன அவர், மருத்துவராகி சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புகிறார்.