போலிஸ்: கைபேசி மோசடிகள் அதிகம்

மின்னணுவியல் பொருட்கள் தொடர்பான மோசடிகளில் கடந்த ஆண்டு பத்தில் ஏழு சம்பவங்கள் கைத்தொலைபேசி விற்பனையுடன் தொடர்புடையவை என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

மின்னனுவியல் மோசடிகளின் தொடர்பில் குறைந்தது 700 புகார்களைப் பெற்றிருப்பதாக போலிஸ் தெரிவித்தது. இவற்றில் 68 விழுக்காடு, கைத்தொலைபேசி விற்பனை தொடர்பில் செய்யப்பட்டதாக போலிஸின் ஆலோசனைக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறுவதாக போலிஸ் தெரிவித்தது. சந்தையில் வெளியிடப்படும் அண்மை கைபேசி வடிவங்களின் பிரபலத்தை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாக போலிஸ் கூறியது.

மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு போலிஸ் பொதுமக்களுக்கு இந்தக் குறிப்புகளை முன்மொழிகிறது: 

-நம்ப முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் கைபேசிகள் விற்கப்படுவதாகக் குறிப்பிடும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

-விற்பனையாளர்களின் அடையாள அட்டையையோ வாகன உரிமத்தையோ வைத்து அவர்கள் உண்மையானவர்கள் என்று கருத வேண்டாம்.

- முடிந்தவரை முன்பணம் கட்டுவதைத் தவிர்க்கவும். முன்பணம் கட்டுவதற்கு முன்னர் விற்பனையாளர்களை நேரில் சந்திப்பது நல்லதாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

ஹோங் கா நார்த் தொகுதியில் நேற்று நடைபெற்ற டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளைய தொண்டூழியர் ஒருவர், முதிய குடியிருப்பாளர் ஒருவருக்கு டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

22 Apr 2019

டெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’