மேல்மாடியில் காய்கறித் தோட்டம்; மாதம் 4 டன் காய்கறிகள் உற்பத்தி

அங் மோ கியோ அவென்யூ 6, புளோக் 700ல் உள்ள கார் நிறுத்து மிடக் கட்டடத்துக்கு மேலே உள்ள மாடியில் ‘சிட்டிபோனிக்ஸ்’ என்ற காய்கறித் தோட்டம் ஒன்று சென்ற மாதம் தொடங்கப்பட்டது. இதன் பயனாக சில வாரங்களுக்காகவே மாதம் ஒன்றுக்கு 1,600 பேருக்கு போதுமான காய்கறிகள் உற்பத்தி யாகின.
இதற்குப் பிறகு, பின்னால் 1,800 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த காய்கறித் தோட்டம் முழு அளவில் செயல்படத் தொடங் கும்போது மாதம் 4 டன் அளவுக்கு காய்கறி உற்பத்தி இங்கிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருக்கும் இடத்தை சிக்கன மாகவும் குறைந்த அளவிலான எரிசக்தி பயன்பாட்டுடன் செயல் படும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காய்கறித் தோட்டத்துக்கு குழாய்கள் வழியாக தொடர்ச்சியாக நீரும், காய் கறி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது.
எனினும், இதற்காக பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்து வது, அதனால் ஏற்படக்கூடிய கழிவு ஆகியவை இதில் இருக் காது. இந்தத் தோட்டத்தை இணைக்கும் குழாய்கள் வழியாக சிறு சிறு கணிமண் திட்டுகளில் விதைகள் தோட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன.
அந்த விதைகள் பின்னர் செடிகளாக வளர்ந்து காய்கறிகளைத் தருகின்றன.