மறுபடியும் வேலை போனதால் முதலாளியை வெட்டினார்

சுங்காய் காடுட் லூப்பில் நேற்று முன்தினம் 30 வயது திரு லின் சின்ஜி இறந்து கிடந்ததை அடுத்து, அவரிடம் வேலை பார்த்த 23 வயது மலேசிய ஊழியர் அவரை வெட்டுக்கத்தியால் தாக் கியதாகக் கூறப்பட்டது.
கொலை செய்ததாக சந்தேகிக் கப்படும் ஆடவர் கடந்த சில ஆண்டுகளாக வேலையில் கவனம் இல்லாமலும் வேலைக்கு வராமலும் இருந்ததாக இறந்தவரின் தந்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.   
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு களாக இறந்தவருக்காக வேலை பார்த்த அந்த ஆடவர் அவர் வேலை குறித்து பல முறை எச்சரிக்கப்பட்டார். 
முதல் முறை வேலையை விட்டு நீக்குவதாகக் கூறியபோது சந் தேக நபர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் திரு லின் மறுபடியும் அவருக்கு வாய்ப்பளித்தார்.
ஆனால் மீண்டும் மோசமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்குவதாகக் கூறியபோதுதான் சந்தேக நபர் வெட்டுக்கத்தியைக் கொண்டு திரு லின்னைத் தாக் கினார். நிறுவனத்தின் இன்னொரு இயக்குநரும் தாக்கப்பட்டு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.