800,000 ரத்தகொடையாளர்களின்தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம்

ரத்த நன்கொடையாளர்கள் 800,000க்கும் மேற்பட்டோரின் தனிநபர் தகவல்கள் இணையத்தில் தவறுதலாகப் பதிவேற்றம் செய்யப் பட்டதாக நேற்று சுகாதார அறிவி யல் ஆணையம் (ஹெஜ்எஸ்ஏ) கூறியது.
ஆணையத்திற்குச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று இவ்வாறு இவ்வாண்டு ஜனவரி 4ஆம் தேதியன்று தவறுதலாகச் செய்ததாகவும் தவறு கண்டுபிடிக் கப்பட்ட உடனே தகவல்களைப் பார்ப்பதற்கான இணைப்பு துண் டிக்கப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைவழி தெரிய வந்துள் ளது.
இத்தனிநபர் தகவல்கள் ஒரே ஒரு முறை மட்டுமே பார்வை யிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இணையப் பாதுகாப்பு நிபுணர் செவ்வாய்க்கிழமை அன்று இணை யத்தளத்தில் இதைக் கண்டுபிடித்த தாகவும் மறுநாள் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடம் (பிடிபிசி) தெரியப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
அதனையடுத்து தேசிய ரத்த வங்கிக்குப் பொறுப்பான ‘எச் எஸ்ஏ’யிடம் ‘பிடிபிசி’ தகவல் தெரிவித்தது.
தகவல்களை நிர்வகிக்கும் சேவை நிறுவனமான ‘செக்கியூர் சொலுஷன்ஸ் குரூப்’புடன் உடனே ‘எச்எஸ்ஏ’ தொடர்புகொண்டு தகவல்களுக்கான இணைப்பைத் துண்டிக்குமாறு சொன்னது.
இதுவரை நாட்டில் ரத்த தானம் செய்த அனைவரின் பதிவு விவரங் களையும் இத்தகவல்கள் கொண்டி ருந்தன. 
ரத்த தானம் செய்ய முன்வந்தும் முடியாமல் போனவர்களின் தகவல் களும் தரவுத்தளத்தில் இடம்பெற்று இருந்தன.