$30,000 மதிப்புள்ள போலி பொருட்கள் சிக்கின

காக்கி புக்கிட் மற்றும் சிராங்கூன் பகுதிகளில் குற்றவியல் புல னாய்வுப் பிரிவு கடந்த புதன்கிழ மையும் வியாழக்கிழமையும் நடத் திய திடீர் சோதனையில் சுமார் $30,000 மதிக்கத்தக்க போலி யான பொருட்கள் கைப்பற்றப்பட் டன.
இதன் தொடர்பில் அவற்றை இணையத்தில் விற்பனை செய்த நான்கு பெண்கள் கைது செய்யப் பட்டனர்.
போலி வர்த்தக முத்திரை களைக் கொண்ட டி-சட்டைகள், காற்சட்டைகள், தொப்பிகள், மேலாடைகள், தரை விரிப்புகள், கைப்பைகள் போன்ற 1,465 பொருட்கள் சிக்கின. 
இதன் தொடர்பில் கைதான 26 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பெண்கள் அந்தப் போலி பொருட்களை இணையத்தில் விற்றதாக நம்பப் படுகிறது.
“இந்தப் பெண்கள் அந்தப் போலி பொருட்களை வெளிநாட்டி லிருந்து தருவித்து, பல்வேறு இணையத்தளங்கள் மூலம் உள்ளூரில் விற்றதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது,” என்று போலிஸ் கூறி யது.
“போலியான பொருட்களை விநியோகிப்பதும் விற்பதும் கடு மையான குற்றங்கள். அவற்றைப் புரிபவர்களுக்கு எதிராகக் கடு மையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்,” என்றும் போலிஸ் மேலும் தெரிவித்தது.