சுரங்க விரைவுப் பாதையில் திடீர் தூறல்

சுரங்க விரைவுப் பாதையில் திடீர் தூறல்

1 mins read
Google News Preferred Icon

மரினா கோஸ்ட்டல் விரைவுப் பாதையின் மேற்குச் செல்லும் வழியில் வாகனமோட்டிகள் மழை அனுபவத்தை நேற்றுக் காலையில் பெற்றனர். சுரங்கப் பாதையின் தீயணைப்பு நீர் தெளிப்பான் தவறுதலாக செயல்படுத்தப்பட்டதால் சுரங்கத்துக் குள் தூறிய மழையைக் காட்டும் காணொளி ஒன்று சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர் குழுவினர் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றிருந்தது. மோட்டார் சைக்கிளோட்டிகள் நனையாமல் இருக்க சுரங்கப்பாதையின் ஓரத்தில் ஒதுங்கி, மழை ஆடைகளை அணிவதை அந்தக் காணொளிக் காட்சியில் காண முடிந்தது. தண்ணீரைக் கொண்டு தீயணைக்கும் கட்டமைப்பு நேற்றுக் காலை 7.10 அளவில் செயல்பட்டதை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தவறுதலாகச் செயல்படுத்தப்பட்டதாகவும் சுரங்கப் பாதை யில் நெருப்போ, கடல்நீர் கசிவோ இல்லை என்றும் கூறியது.