பிரதமருக்கு எதிரான மனு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் இணையவாசி

பிரதமர் லீ சியன் லூங் தமக்கு எதிராகத் தொடுத்த அவதூறு வழக்குக்கு எதிராக இணையவாசி லியோங் ஸி ஹியன் தொடுத்த எதிர் மனுவை சென்ற வாரம் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து தற்பொழுது லியோங் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.
திரு லியோங்கின் பதில் கோரிக்கை அடங்கிய மனுவை நீதிபதி அய்டிட் அப்துல்லா சென்ற வாரம் நிராகரித்தார். 
திரு லியோங் தம்மீதான அவதூறு வழக்கை நீதிமன்ற நட வடிக்கையை தவறாகப் பயன் படுத்தும் செயல் என்று கூறியதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. திரு லியோங்கின் கூற்றுக்கு சட்ட அடிப்படை இல்லை என்று உயர் நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறி யிருந்தது.
முன்னதாக, மற்றொரு வழக்கு ஒன்றில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்ற அடிப்படை சிங்கப்பூர் சட்டத்தில் இல்லாத ஒன்று என மேல்முறையீடு நீதி மன்றம் கூறியிருந்தது.
இது குறித்து கருத்துரைத்த திரு லியோங்கின் வழக்கறிஞர் லிம் தியன், லியோங்கின் எதிர் மனுவை நிராகரித்த உயர் நீதி மன்றம், நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது என்பது சிங்கப்பூர் சட்டத்தில் இல்லாத ஒன்று என்ற முந்தைய மேல்முறையீடு நீதிமன்றத் தீர்ப் புக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது என்று தமது அறிக்கையில் கூறி னார். 
எனினும், தற்போதைய வழக்கு முந்தைய வழக்கிலிருந்து வேறு பட்டது என்று கூறுவதற்கு தகுந்த வாதங்களைத் தம்மால் முன்வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
பேச்சுரிமையை பாதுகாக்க நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று திரு லியம் தியன் தெரிவித்தார்.