கள்ள சிகரெட் வாங்கி பிடிபட்டவர்கள்  2018ல் அதிகம்: 6,115 பேர் சிக்கினர்

சிங்கப்பூரில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்கி பிடிபட்டவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமாகியது. 
சென்ற ஆண்டு சட்டவிரோத சிகரெட்டுகள் வாங்கி சிக்கியவர்களின் எண்ணிக்கை 6,115 பேர் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2017ல் 5,846 பேராக இருந்தது. 2016ல் கள்ளச் சிகரெட்டுகளை வாங்கி 5,184 பேர் பிடிபட்டனர். 
இந்த எண்ணிக்கை 2015ல் 5,472 பேராகவும் 2014ல் 5,893 பேராகவும் இருந்தது.