பொய்ச் செய்தி சட்டம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது

சிங்கப்பூரின் பொய்ச் செய்தி சட்டம் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. அரசிதழில் இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புடன் சேர்த்து பொய்ச் செய்திகளிடமிருந்து பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பிற துணைச் சட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டன.

ஓராண்டுக்கு மேலாக பொதுமக்களிடமிருந்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த மசோதா கடந்த மே மாதம் சட்டமானது. எவையெல்லாம் பொய்ச் செய்திகள் என்று முதலில் முடிவெடுக்கவும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்று முடிவெடுக்கவும் அமைச்சர்களுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் தருவதாகச் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தியபோது சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

புதிய சட்டத்தின்கீழ் அமைச்சர்கள் எடுக்கும் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் மற்ற அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பொய்ச் செய்திகள் ஒருசில நிமிடங்களிலேயே பரவக்கூடியவை என்றும் அவை கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்றும் திரு சண்முகம் தெரிவித்தார்.

இணையத்தில் வலம் வரும் இத்தகைய பொய்ச் செய்திகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தேவையான வழிவகை களைத் தரும் நோக்கில் புதிய

சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக திரு சண்முகம் தெரிவித்தார்.

புதிய சட்டத்தின்கீழ், இணையத்தில் வலம் வரும் பொய்ச் செய்திக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சர்கள் முடிவெடுக்கலாம்.

அந்தப் பொய்ச் செய்திகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ அவர்கள் உத்தரவிடலாம்.

இந்த உத்தரவுகளுக்குப் பணியாத தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்குப் புதிய சட்டத்தின்கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!