தோ பாயோவிலுள்ள ஒரு சீன ஆலயத்திற்கு முன்னால் சிவப்பு நிறக் கார் ஒன்று தீப்பற்றியது.
தோ பாயோ லோரோங் 1க்கும் 6க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் சியூ டென் சியென் தோங் ஆலயத்திற்கு அருகே பிற்பகல் 2.15 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.
காரின் இயந்திரம் திடீரென தீப்பற்றியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.