லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள துணைச்சாலையில் நேற்று நடந்த விபத்தையடுத்து பெளத்த துறவியான ‘வெனரபல் ஷி ஃபா ரோங்’ (Venerable Shi Fa Rong) இன்று அப்பகுதியில் பிரார்த்தனைகள் செய்தார்.
இன்று (30 டிசம்பர்) காலை 10.50 மணி அளவில் அவ்விடத்திற்குச் சென்று பூக்கள், மெழுகுவத்தி ஆகினவற்றை வழங்கினார்.

அப்பகுதியில் இருந்த சில பெண் ஊழியர்கள் அவர் வழங்கிய மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தனர்.
“குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிரான தொண்டூழியர்கள்” என்ற பிலிப்பினோ அமைப்புடன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் இத்துறவி.
அவ்வமைப்பிற்கான நீல அரைச்சட்டையை அணிந்துள்ளார்.
