வெஸ்ட் கோஸ்டில் விபத்து; இளையர் மரணம்

வெஸ்ட் கோஸ்ட்டில் சிறிய ரக பேருந்துடன் மோதிய விபத்தில் 24 வயது மோட்டார் சைக்கிளோட்டி இன்று (மார்ச் 3) உயிரிழந்தார்.

வெஸ்ட் கோஸ்ட் ரோடு, கிளமென்டி அவென்யூ 2 ஆகியவற்றுக்கு இடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து இன்று அதிகாலை 5.34 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது.

மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் துணை மருத்துவ ஊழியர்கள் உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கூறினர்.

கவனக் குறைவாக வாகனம் ஓட்டியதற்காக சிறிய ரக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 62.

சம்பவத்தின் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களில், சாலையில் சிதைந்து கிடந்த மோட்டார் சைக்கிள், அதன் அருகே நீல வண்ண கூடாரம் ஆகியவற்றைக் காண முடிந்தது.

விபத்து குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#வெஸ்ட் கோஸ்ட் விபத்து #மோட்டாசைக்கிள் #மினிபஸ் #விபத்து #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!