ஊழியர்களுக்குக் கட்டாய விடுப்பு

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து மார்ச் 14 முதல் 20 வரை சிங்­கப்­பூர் திரும்­பிய ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் கட்­டாய விடுப்பு விதிக்­கு­மாறு மனி­த­வள அமைச்சு நிறு­வ­னங்­க­ளுக்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. நேற்று இரவு 11.59 மணி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனைத்­துப் பய­ணி­க­ளுக்­கும் 14 நாட்­கள் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­கிறது.

இந்­தப் புதிய கட்­டுப்­பாடு நடப்­புக்கு வரு­வ­தற்கு முன்­னர் நாடு திரும்­பிய தங்­க­ளது ஊழி­யர்­க­ளைக் கட்­டாய விடுப்­பில் செல்­லப் பணிக்­கும் முத­லா­ளி­கள் மனி­த­வள அமைச்­சி­ட­மி­ருந்து நிதி ஆத­ர­வைக் கோர முடி­யும். கொரோனா கிருமி பர­வ­லின் பாதிப்­பு­க­ளைத் தொடர்ந்து நிறு­வ­னங்­க­ளின் நிதிச் சுமை­யைத் தணிக்க அமைச்சு இத்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இங்கு கிரு­மித்­தொற்று அதி­க­ரித்­தி­ருப்­ப­து­டன் பெரும்­பா­லா­னாவை வெளி­யி­லிருந்து வந்த தொற்­று­க­ளாக இருப்­ப­தால் கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த பள்­ளி­கள் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன. அதை­ய­டுத்து இந்த முயற்சி எடுக்­கப்­ப­டு­கிறது.

மார்ச் 14 முதல் நேற்று வரை­யில் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பிய அனைத்து மாண­வர்­களும் ஊழி­யர்­களும் திரும்­பிய தேதி­யி­லி­ருந்து 14 நாட்­கள் கட்­டா­ய­மாக விடுப்­பில் இருக்­க­வேண்­டும். நேற்று இரவு 11.59 மணி முதல் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யும் அனைத்து பய­ணி­க­ளுக்­கும் 14 நாட்­கள் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­கிறது. அவர்­கள் 14 நாட்­க­ளுக்கு தங்­கள் வீடு­களை விட்டு வெளி­யேற முடி­யாது.

“இந்த தேசிய நட­வ­டிக்­கை­யால், இரு வார காலத்­துக்­குத் தங்­கள் குழந்­தை­க­ளுக்கு பரா­ம­ரிப்பு வழங்க வேண்­டி­யுள்ளதால் பல பெற்­றோர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பதை அறிகிறோம். அதே நேரத்­தில் அண்­மை­யில் பய­ணம் செய்­த­வர்­க­ளால் கிரு­மித்­தொற்று மேலும் பர­வு­வ­தைத் தடுக்க வேலை­யி­டத்­தி­லி­ருந்து விலகி இருக்க இது ஒரு பய­னுள்ள முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யா­கும்,” என்றது அமைச்சு.

இந்த 14 நாள் கால­க்கட்­டத்­தில் ஊழி­யர்­களை வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய அனு­ம­திக்­கும் நீக்­குப்­போக்­கான ஏற்­பா­டு­களை நிறு­வ­னங்­கள் மேற்­கொள்ள வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு கூறி­யது.

சில நிறு­வ­னங்­கள் ஏற்­கெ­னவே கடந்த சனிக்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யில் வெளி­நாட்டு பய­ணங்­க­ளி­லி­ருந்து திரும்­பிய ஊழி­யர்­களை வீட்­டி­லேயே இருக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தாக அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­த­கைய நிறு­வ­னங்­கள், கட்­டாய விடுப்­பில் இருக்க சொல்­லப்­படும் ஊழி­யர்­களை அவர்­க­ளது ஆண்டு விடுப்­பைப் பயன்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­வது உட்­பட தற்­போ­தைய நீக்­குப்­போக்­கான வேலை முறை­க­ளை­யும் விடுப்பு ஏற்­பா­டு­க­ளை­யும் தொடர வேண்­டும் என அமைச்சு கூறி­யது.

எனி­னும், அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுக்­காத நிறு­வ­னங்­கள், “வீட்­டி­லி­ருந்து வேலை சாத்­தி­ய­மில்லை என்­றால், ஊழி­யர்­க­ளுக்கு கூடு­த­லாக ஊதி­யத்­து­டன் கூட விடுப்பு வழங்க முத­லா­ளி­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்,” என அமைச்சு சுட்­டி­யது.

இந்த நிறு­வ­னங்­கள் கட்­டாய விடுப்பு ஆத­ரவு திட்­டத்­தின் கீழ் அன்­றா­டம் $100 மானி­யத்­துக்கு விண்­ணப்­பிக்­க­லாம். இத்­திட்­டத்­தின் கீழ் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், வேலை அனு­மதி அட்டை (வொர்க் பஸ்) வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு நிறு­வ­னங்­கள் மானி­யம் கோர­லாம். பாதிக்­கப்­பட்ட வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­க­ளின் தீர்­வைத் தள்­ளு­ப­டி செய்யவும் கோரிக்கை விடுக்­க­லாம்.

கட்­டாய விடுப்பு முடிந்­த­தும் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வோர் ஊழி­ய­ருக்­கும் தகு­தி­யுள்ள முத­லா­ளி­கள் தின­சரி நிதி ஆத­ர­வுக்கு விண்­ணப்­பிக்க முடி­யும். எனி­னும், கட்­டாய விடுப்பு காலத்­தில் வெளி­நா­டு­களில் பணி­பு­ரிந்­தி­ருந்­தால் அல்­லது பாதிக்­கப்­பட்ட ஊழி­யர் தனது சொந்த வரு­டாந்­திர விடுப்பு, குழந்தை பரா­ம­ரிப்பு விடுப்பு அல்­லது வேறு ஏதே­னும் ஒன்­றைப் பயன்­ப­டுத்த நேர்ந்­தால் முத­லா­ளி­கள், சுய­தொ­ழில் செய்­ப­வர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோர் ஆத­ரவு திட்­டத்­தின் கீழ் இழப்­பீட்­டுத் தொகை­யைக் கோர முடி­யாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!