ரயில், பேருந்துச் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் ஓடும்

நோய் முறியடிப்புக் காலம் நேற்றோடு முடிவடைந்து இன்று முதல் கட்டுப்பாட்டுத் தளர்வின் முதற்கட்டம் தொடங்கும் இவ்வேளையில் ரயில், பேருந்துச் சேவைகள் முன்பிருந்தபடி வழக்கமாக ஓடும் என்றும் ரயில்கள் செயல்படும் நேரமும் வழக்கநிலைக்குத் திரும்பிவிடும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

பொழுதுபோக்குப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் தேவை குறைவாக இருப்பதால், அந்தச் சேவைகள் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

நோய் முறியடிப்புக் காலத்துக்கு முன் இருந்த நிலவரப்படி, வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வடகிழக்கு, வட்டப்பாதை, டௌன்டவுன் பாதைகளில் உச்ச நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் உச்சமற்ற நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் சேவையாற்றிக்கொண்டிருந்தன.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உச்ச நேரத்தில் ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் உச்சமற்ற நேரத்தில் 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் சேவையாற்றும்.

“பயணிகளிடையே பாதுகாப்பு இடைவெளியை உறுதிப்படுத்துவதில் சவால்கள் இருக்கும். இதுவரை பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது பாதுகாப்பு இடைவெளியை உறுதிப்படுத்துவது கடுமையான சவாலாக இருக்கும்,” என்று நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான்.

போக்குவரத்துத் தூதர்கள், போதுப் போக்குவரத்து ஊழியர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடக்குமாறும் அமைச்சர் பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!