தற்காலிக வேலைகளில் ஸ்கூட் விமான சிப்பந்திகள்

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானச் சேவைகளுக்கு பெருமளவில் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட ஸ்கூட் விமான சிப்பந்திகள் ams Sensor Singapore நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரிகின்றனர். குறைந்தது மூன்று மாதங்களுக்கு அவர்கள் அங்கு வேலை செய்வர். கடந்த மாதத்திலிருந்து அவர்கள் அங்கு பணிபுரிய தொடங்கிவிட்டனர்.

இதன் மூலம் வேறு துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஸ்கூட் விமானச் சேவை முதல்முறையாகப் பங்காளித்துவம் கொண்டுள்ளது.

இதற்கு முன்பு பொது மருத்துவமனைகள், அரசாங்கத்தின் மற்ற அமைப்புகள் ஆகியவற்றிலும் ஸ்கூட் விமானச் சிப்பந்திகள் வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.