விளையாட்டு, குதிரைப் பந்தயங்கள் இணையம் வழியாக நாளை முதல் மீண்டும் செயல்படும்

இணையம் வழி விளையாட்டு, குதிரைப் பந்தையம் ஆகியவற்றுக்கான பந்தயப் பிடிப்பு நாளை (ஜூன் 15) முதல் தொடங்க இருப்பதாக சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பந்தயம் கட்டுபவர்கள் வெளிநாட்டு குதிரைப் பயந்தயத்தின் மீது புதன் கிழமை முதல் பந்தயம் கட்டலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பும் பந்தயப் பிடிப்பு, அதிர்ஷ்டக்குலுக்கு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தன.

தனது மற்ற கிளைகள், விற்பனை நிலையங்கள் போன்றவை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மூடியிருக்கும் என சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கட்டம் கட்டமாக பாதுகாப்பான முறையில் வர்த்தகங்களைத் திறக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கேற்ப இவ்வாறு அறிவிப்பதாக அது தெரிவித்தது.

வரும் புதன் கிழமை முதல் நடக்கவிருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் மீது பந்தயம் கட்டலாம் என அது தெரிவித்தது.

டோட்டோ, 4D, சிங்கப்பூர் சுவீப் போன்ற அதிர்ஷ்ட குலுக்குகளும் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக அது அறிவித்தது.

தள்ளிவைக்கப்பட்ட அதிர்ஷ்ட குலுக்குகளுக்கான சீட்டுகளை வைத்திருப்போர் அவற்றை பத்திரமாக வைத்திருக்குமாறு அது அறிவித்தது.

அதேபோல, பரிசுகளைப் பெற்றுகொள்வதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10, 2019 முதல் ஏப்ரல் 5,2020 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட அதிர்ஷ்டக்குலுக்கு, பந்தயங்களுக்கான வெற்றி பெற்ற சீட்டுகளுக்கு பணம் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அது தெரிவித்தது.

இதன் தொடர்பிலான மேல் விவரங்களுக்கு 6786-6688 என்ற எண்ணில் அழைக்கவும்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!