இன அடிப்படையிலான கொள்கைகளை மறுஆய்வு செய்ய எதிர்க்கட்சி கோரிக்கை

வெவ்­வேறு இன அடிப்­ப­டை­யி­லான கொள்­கை­க­ளுக்கு வெளிப்படையான மறு­ஆய்வு தேவை என அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ரும் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வ­ரு­மான சில்­வியா லிம் கேட்­டுக்­கொண்­டார்.

சீனர், மலாய்க்­கா­ரர், இந்­தி­யர் மற்­றும் பிறர் (CMIO) என இன வகைப்­ப­டுத்­தல் முறையிலான கொள்­கை­யும் வீட­மைப்­பு வளர்ச்சிக் கழ­கத்­தின் இன ஒருங்­கி­ணைப்­புக் கொள்­கை­யும் அவர் கோரிக்கை விடுத்த அம்­சங்­களில் அடங்­கும்.

மன்­றத்­தில் நேற்று அதி­பர் உரை மீதான விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய அவர், இனபேதமற்ற சமூ­கம் என்­பதை நோக்­கிய சிங்­கப்­பூ­ரின் பய­ணத்­துக்கு ஆறு அம்­சங்­கள் மறு­ஆய்வு செய்­யப்­பட வேண்­டும் என அவர் பரிந்­து­ரைத்­தார்.

“மறுஆய்வு மூன்று விரிவான அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும். பொருத்­த­மான நிபு­ணத்­து­வத்­து­டன் கல்­வியை உள்­ள­டக்­கு­வ­தோடு குடி­மக்­க­ளின் வெவ்­வேறு வய­துப் பிரி­வி­ன­ருக்­கும் நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வம் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும்.

“நமது இப்­போதை பல இன உணர்வு எந்த அள­வில் இருக்­கிறது என்­ப­தை­வும் இனபேதமற்ற சமூ­கம் என்­னும் பய­ணத்­திற்­காக நாம் என்­ன­வெல்­லாம் செய்ய முடி­யும் என்­ப­தை­யும் விரி­வான முறை­யில் பிர­தி­ப­லிப்­பதை மறு­ஆய்வு நோக்­க­மா­கக் கொண்­டி­ருக்க வேண்­டும்,” என்­றார் திரு­வாட்டி லிம்.

1824ஆம் ஆண்டு கால­னித்­துவ காலத்­தில் இன வகைப்­ப­டுத்­தல் முறையை சிங்­கப்­பூர் முதன்மு­த­லாகப் பயன்­ப­டுத்­தி­யது என அவர் குறிப்­பிட்­டார்.

கலப்பு மணம் புரிந்­தோ­ருக்­குப் பிறக்­கும் குழந்­தை­கள் இரட்டை இனத்­தின் அடிப்­ப­டை­யில் பதிவு செய்­வ­தால் அத்­த­கைய திரு­ம­ணங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பதை அர­சாங்­கம் அங்­கீ­க­ரித்து உள்­ள­தாக திரு­வாட்டி லிம் குறிப்­பிட்­டார்.

“சிறு­பான்­மை­யி­ன­ரின் உரி­மை­க­ளைப் பாது­காக்க இன வகைப்­ப­டுத்­தல் முறை அவ­சி­யம் என்ற அள­வில் அர­சாங்­கம் அத­னைத் தற்­காத்­தபோதிலும் சிறு­பான்­மை­யி­னர் உரிமை என்­பது சிக்­க­லான அம்­சம் என்­ப­தால் அது குடி­மக்­க­ளின் உரிமை என விவா­திக்­கப்­பட வேண்­டும்.

“வெவ்­வேறு இனத்­தைச் சேர்ந்த கலப்பு மணத் தம்­ப­தி­யி­ன­ருக்­குப் பிறந்­த­வர்­களும் கலப்பு மணம் புரி­யும் போக்கு அதி­க­ரித்­துக்­கொண்டே வரும் நிலை­யில் இன வகைப்­ப­டுத்துதல் என்­பது வருங்­கா­லத்­தில் எந்த அள­வுக்கு தாக்­குப்­பி­டிக்­கும் என்­பதை வியப்­பு­டன் பார்க்­கி­றேன்,” என்­றார் அவர்.

மேலும் அவர் பேசு­கை­யில், “இனங்­கள் பற்­றிய விரி­வான தக­வல்­களை சேக­ரிக்­கும் அர­சாங்­கம், அவற்­றில் எதனை பொது­மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டும் என்­ப­தைத் தேர்ந்­தெ­டுக்­கிறது. அதற்­குக் கார­ணங்­கள் இருக்­க­லாம்.

“ஆயி­னும் குறிப்­பிட்ட சில சமூ­கங்­க­ளைப் பாதிக்­கும் விவ­கா­ரங்­கள் குறித்­து புரிந்­து­கொள்ள இனங் ­கள் மீதான தக­வல்­கள் தேவைப்ப­டு­கின்­றன,” என்­றார் திரு­வாட்டி லிம்.

சிறைச்­சாலையில் உள்ள கைதிக­ளின் இன­வா­ரி­யான எண்­ணிக்­கை­யைக் கேட்டு தாம் நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி ஒன்றை தாக்­கல் செய்­தி­ருந்­ததாக நினை­வு­கூர்ந்த அவர், அது தொடர்பான புள்­ளி­வி­வ­ரங்களை சிறைத்­துறை பகிர்ந்­து­கொள்ள இய­லாது என்று தமக்கு பதில் வந்­த­தா­க­வும் அதற்­கு­ரிய விளக்­கம் தரப்­ப­ட­வில்லை என்­றும் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!