வழிகாட்டும் ஒளியாக ஆசிரியர்கள் சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் சிறகடிக்கக் கற்றுத்தரும் தமிழ்ச்செல்வி

ஆசி­ரி­யர் தினத்தை முன்­னிட்டு ‘கல்வி அமைச்சு-தேசிய சமூக சேவை மன்­றத்­தின் சிறப்பு தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்குக் கற்­பிக்­கும் தலை­சி­றந்த ஆசி­ரி­யர்­கள்’ (MOE-NCSS OUTSTANDING SPED TEACHER AWARD) என்­னும் பெய­ரி­லான விருது வழங்­கப்­பட்­டது. மொத்­தம் 115 பரிந்துரை களில் மூன்று ஆசி­ரி­யர்­கள் இவ்­வி­ரு­து­க­ளைப் பெற்­ற­னர்.

கல்வி அமைச்­சின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 2ஆம் தேதி நடந்த மெய்­நி­கர் கொண்­டாட்­டம் ஒன்­றில் கிரேஸ் ஆர்­ச்சர்ட் பள்ளி ஆசி­ரி­யர் திரு­வாட்டி தமிழ்­செல்­வி­யும் அங்­கீ­ க­ரிக்­கப்­பட்­டார்.

தமிழ்­ச்செல்வி அவ­ரின் பள்ளி தலைமை ஆசி­ரி­ய­ரால் விரு­துக்­குப் பரிந்­துரை செய்­யப்­பட்­டார். சிறப்புத் தேவை­யு­டைய மாண­வர்­களை போட்­டித்­தன்­மை­மிக்க விளை­யாட்டு­ களில் ஈடு­ப­டுத்­தும் தனித்­துவ முயற்­சி­கள் தமிழ்ச்செல்வியின் சிறப்­பான செயல்­பா­டு­களில் ஒன்று.

“மாண­வர்­கள் இளம்­வ­ய­து என்பதால் நண்­பர்­க­ளு­டன் வெகுளி­ யாக இருந்­து­வி­டு­கின்­ற­னர். படிப்பு, விளை­யாட்­டு­களில் கவ­னத்­து­டன் ஈடு­ப­டு­வது சிர­மம். சிறப்­புத் தேவை­கள் இருப்­ப­தால் ஊக்­கம் இல்­லா­ம­லும் போக­லாம்.

“ஆனால் பல மாண­வர்­க­ளுக்­குத் திறமை உண்டு. சாதா­ரண மாண­வர்­க­ளை­விட சில­ரால் நன்­றாக செய­லாற்ற முடி­யும். அவர்­

க­ளின் திறன்­களை வெளிக்­கொ­ண­ரவே தனிப்­பட்ட அக்­க­றை­யில் முயற்­சி­கள் எடுத்து வரு­கி­றேன்,” என்­றார் செல்வி, 52.

கடந்த 15 ஆண்­டு­க­ளாக சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்­குக் கற்­பித்து வரும் செல்வி, தற்­போது பள்­ளி­யில் மாண­வர் தலை­மைத்­துவ பாடத்­திற்கு தலைமை ஆசி­ரி­ய­ரா­க­வும் கட்­டுப்­பாடு ஆலோ­ச­க­ரா­க­வும் பொறுப்பு வகிக்­கி­றார். கணி­தம், உடற்­கல்வி ஆகிய பாடங் களை­யும் அவர் கற்­பிக்­கி­றார்.

அத்­து­டன் சிங்­கப்­பூர் சிறப்பு ஒலிம்­பிக் அமைப்­பில் விளை­யாட்­டா­ளர்­க­ளுக்­கான தட­கள வழி­காட்டி யாக­வும் சிங்­கப்­பூர் உடற்­கு­றை­ உள்ளோருக்கான விளை­யாட்டு மன்­றத்­தின் நிர்வாகக் குழு உறுப் பினராகவும் இருக்­கி­றார் செல்வி.

அவர் வழி­காட்­டிய இரண்டு மாண­வர்­கள் அனைத்­து­லக போட்டி­ களில் பங்­கேற்று, பதக்­கங்­கள் வென்­றுள்­ளது இங்கே குறிப்­பி­டத் தக்க அம்­சம்.

“எல்லாரைப்போல சிறப்­புத் தேவை உள்ளோரையும் சம­மாக மக்­கள் கருதவேண்டும். அவர்­கள் ஒன்றும் வேற்­றுக்கிரக மனி­தர்­கள் அல்ல. சமூ­கத்­து­டன் அவர்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து திற­மை­ வாய்ந் த­வர்­க­ளுக்குச் சம வாய்ப்­ப­ளிப்­பது முக்­கி­யம்,” என்­றார் செல்வி.

சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்கு வழி­காட்ட மேலும் பலர் தொண்­டூ­ழி­யர்­க­ளாக முன்­வ­ர­வேண்­டும் என்­பது அவ­ரது விருப்­பம்.

தமது பள்ளி, சக ஆசி­ரி­யர்­கள், குடும்­பம் ஆகி­யோ­ருக்கு நன்றி

தெரி­வித்த செல்வி, கற்­பித்­தல் துறை தமக்கு அர்த்­த­முள்­ள­தாக அமைந்­துள்­ள­தெனக் குறிப்­பிட்­டார்.

மெய்­நி­கர் கொண்­டாட்­டங்­களில் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்­டார்.

சிறப்­புத் தேவை­யுள்ள மாண­வர்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளும் ஆசி­ரி­யர்­க­ளின் போட்­டித்­தன்­மை­யை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் அதி

கரிக்­கும் புதிய நீண்டகாலத் திட்­டங்­கள் பற்றி அவர் அந்­நி­கழ்­வில் விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!