சிங்கப்பூர்: நடிகருக்கு சிறைத்தண்டனை?

நடிகருக்கு சிறைத்தண்டனை?

 

கட்டாயமாக சிகிச்சைக்கு அனுப்பும் உத்தரவைப் பிறப்பிக்க பொருத்தமான நிலையில் அவர் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருவர், சிறைத் தண்டனைக்குப் பதிலாக சிகிச்சைக்கு அனுப்பப்படுவார். சிங்கப்பூரரான இந்தப் பாடகருக்கு வயது 27. திருடியதாகவும் பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் இவர் சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன்னதாக 2014ல் இரண்டு கைபேசிகளைத் திருடியதற்காக இவருக்கு $2,000 அபராதம் விதிக்கப் பட்டது உண்டு. முகம்மது அலிஃப், சென்ற ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி ஹேவ்லக் ரோட்டில் இருக்கும் ஸ்டுடியோ எம் ஹோட்டலில் ஓர் அறையில் தங்கி இருந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த ராஜா யுனிகா பிரதான புத்ரி, 32, என்ற நடிகையின் பையில் இருந்து $300 மற்றும் ஒரு மில்லியன் ரூப்பியா (S$94) பணத்தை திருடினார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணிக்கு ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதி இணைப்புப் பாலத்தில் இந்த நடிகர் சத்தம் போட்டபடி யாரையோ நோக்கி சைகை காட்டியபடி இருந்ததை போலிஸ் அதிகாரி ஒருவர் கண்டார்.

அதிகாரி ஆலோசனையைக் கேட்டு அமைதி அடைந்த நடிகர், ஒரு மணி நேரம் கழித்து பக்கத்தில் இருந்த ஒரு டாக்சியின் கதவில் உதைத்தார். பிறகு அவர் கைதானார்.

 

கிராப் நிறுவனத்துக்கு $10,000 அபராதம்

 

கிராப் வாடகை கார் நிறுவனத்திற்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது கைபேசிச் செயலியில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க தவறிவிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்டது.

கிராப் நிறுவனம், இதுபோன்ற குற்றச் செயல்களை இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை செய்துள்ளது.

தனி நபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தனது இணையத் தளத்தில் வியாழக்கிழமை எழுத்து மூலமான தனது முடிவை வெளியிட்டது. கிராப் நிறுவனத்தின் வாடகை கார் பதிவுச் செயலியின் மென்பொருள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டது.

அதன் காரணமாக 21,541 ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் சொந்த தகவல்களை அங்கீகாரம் இல்லாமல் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 

தண்ணீர் குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $56,500 அபராதம்

டன்னர்ன் ரோட்டில் தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்தியதற்காகவும் அனுமதி இல்லாமல் இரும்புத் தகட்டைப் பதிக்கும் வேலையை மேற்கொண்டதற்காகவும் ஃபெங் மிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனத்திற்கு $56,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தண்ணீர் குழாய் 50 செ.மீ. விட்டம் உடையது. அது 2019 செப்டம்பர் 20ஆம் தேதி சேதப்படுத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் உள்ள 38 குடும்பங்களுக்குத் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.

குழாய் சேதமடைந்ததால் சுமார் 468,000 லிட்டர் தண்ணீர் விரயமாகிவிட்டது. இந்த நீரைக் கொண்டு ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் ஐந்தில் ஒரு பங்கை நிரப்பிவிடலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஃபெங் மிங் நிறுவனம், புக்கிட் தீமாவில் சாலையை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக இரும்புத் தகட்டை பூமிக்குள் இறக்கும் பணியை மேற்கொண்டது. ஆனால் அந்தப் பணிக்கு அங்கீகாரம் பெறப்படவில்லை. தகட்டை பூமிக்குள் இயந்திரம் இறக்கியபோது தகடு தண்ணீர்க் குழாயைச் சேதப்படுத்திவிட்டது.

ஃபெங் மிங் நிறுவனம் முன்பு ஒரு முறை இதே போன்ற குற்றத்தைச் செய்து அபராதம் செலுத்தி இருக்கிறது. 2013 அக்டோபர் மாதம் கேலாங் லோரோங் 1ல் 30 செ.மீ. விட்டமுள்ள தண்ணீர்க் குழாயைச் சேதப் படுத்தியதற்காக அந்த நிறுவனத்துக்கு $40,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon