சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் உற்பத்தித் துறை எழுச்சி

மூன்று மாத வீழ்ச்­சிக்­குப் பின்­னர் சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித் துறை கடந்த மாதம் வளர்ச்சி கண்­டது. இரண்­டை தவிர்த்து மற்ற எல்­லா துறைகளிலும், குறிப்­பாக மின்­னி­யல் துறை­யில் எழுச்சி ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்­தத் துறை­யின் வளர்ச்சி சாத்­தி­ய­மா­னது.

இது பொருளியல் துறை பகுப்­பாய்­வா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பை­யும் கடந்த வியப்­புக்­கு­ரிய செயல்­பாடு.

இவ்­வாண்­டுக்­கான முன்­னு­ரைப்பை அவர்­கள் மேம்­ப­டுத்­திய நிலை­யில் அவர்­க­ளின் கணிப்­பை­யும் இவ்­வ­ளர்ச்சி மிஞ்­சி­யது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் தொழில்­துறை உற்­பத்தி கடந்த மாதம் 13.7 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் அதன் அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மே மாதத்­தில் 8.3 விழுக்­காடு, ஜூனில் 6.4 விழுக்­காடு, ஜூலை­யில் 7.6 விழுக்­காடு என வரி­சை­யாக மூன்று மாதங்­கள் அத்­துறை சரி­வைக் கண்­டி­ருந்­தது.

நான்­கா­வது மாதத்­தில் கண்­டி­ருக்­கும் வளர்ச்சி உயிர்­ம­ருத்­துவ உற்­பத்­தி­யைத் தவிர்த்­துப் பார்த்­தால் 15.3 விழுக்­காடு என்­றது கழ­கம்.

மாத அடிப்­ப­டை­யில் பரு­வத்­திற்­கேற்ப சரிக்­கட்­டப்­படும் தொழிற்­சாலை உற்­பத்தி ஆகஸ்ட் மாதம் 13.9 விழுக்­காடு வளர்ந்­தது. உயிர்

­ம­ருத்­துவ உற்­பத்­திக்கு அப்­பாற்­பட்ட இதன் வளர்ச்சி 4.8 விழுக்­காடு. பொதுத் தயா­ரிப்பு, போக்­கு­

வ­ரத்து பொறி­யி­யல் ஆகிய இரு துறை­களில் கொவிட்-19ன் தாக்­கம் தொடர்ந்து தென்­ப­டு­கிறது. இருப்­பி­னும் மின்­னி­யல் துறை கடந்த மாதம் அற்­பு­த­மான வளர்ச்­சி­யைக் கண்­டது. ஆண்­டுக்கு ஆண்டு என்­னும் அடிப்­ப­டை­யி­லான அதன் வளர்ச்சி 44.2 விழுக்­காடு.

பகுதி மின்­க­டத்­தித் துறை­யின் பங்­க­ளிப்பே இந்த வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணம் என்­றது கழ­கம். மெய்­நி­கர் சேவை­கள், தரவு நிலை­யங்­கள், ஐந்­தாம் தலை­முறை கட்­ட­மைப்­புக்­கான சந்தை ஆகி­ய­வற்­றி­ட­மி­ருந்து எழுந்த தேவை­க­ளுக்கு இடை­யில் பகுதி மின்­க­டத்­தித் துறை 56.9 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

உற்­பத்­தித் துறை வளர்ச்சி கண்­ட­தாக வெளி­யான அறிக்­கை­யைத் தொடர்ந்து யுஓபி வங்கி அதன் முழு ஆண்­டுக்­கான தொழில் துறை உற்­பத்தி முன்­னு­ரைப்பை -2 விழுக்­காடு என்­ப­தில் இருந்து +2.5 விழுக்­காடு என மேல்­நோக்கி திருத்­தி­யது.

மூன்று மாத சரிவுக்குப் பின்னர் ஆகஸ்டில் 13.7% வளர்ச்சியுடன் மீண்டது

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon