சுடச் சுடச் செய்திகள்

அமைச்சர்: பொதுப் போக்குவரத்து ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை

பய­ணி­க­ளின் துன்­பு­றுத்­த­லில் இருந்து பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளைப் பாது­காக்­கும் நோக்­கில், பேருந்து ஓட்­டு­ந­ரின் இருக்­கை­யைச் சுற்றி காப்பு அமைத்­தல் போன்ற நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக போக்­கு­வரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரி­வித்­துள்­ளார்.

ஆயி­னும், அத்­த­கைய துன்­புறுத்­த­லில் ஈடு­ப­டா­த­வாறு பய­ணி­கள் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று திரு சீ வலி­யுறுத்தி இருக்­கி­றார்.

“பொது­மக்­கள் நமது பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து, பாது­காப்­பான சூழ­லில் அவர்­கள் தங்­க­ளின் கட­மையை ஆற்ற அனு­ம­திக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

“அப்­படி நடந்­து­கொள்­ளாத பட்­சத்­தில் நமது போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளின் பாது­காப்பு, கண்­ணி­யத்­தைக் காக்க எத்­த­கைய தடுப்­பரண்­களை அமைத்­தா­லும் உத­வாது,” என்று திரு சீ குறிப்­பிட்­டார்.

எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்து ஓட்­டு­நர் ஒரு­வ­ரைத் தாக்­கு­த­லில் இருந்து காப்­பாற்­றிய ஆட­வர் இரு­வ­ருக்­குப் பாராட்டு தெரி­விப்­ப­தற்­காக அந்­நி­று­வ­னம் நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்ச்­சி­யில் திரு சீ கலந்து ­கொண்டு பேசி­னார்.

இம்­மா­தம் 15ஆம் தேதி பிற்­ப­கல் 2.45 மணி­ய­ள­வில் பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் இருந்து ‘21’ எண் கொண்ட எஸ்­பி­எஸ் பேருந்து ஒன்­றில் 52 வய­தான ஆட­வர் ஒரு­வர் ஏறி­னார்.

அவர் முகக்­க­வ­சம் அணி­யா­த­தைக் கண்ட பேருந்து ஓட்­டு­நர், அதை அணி­யும்­படி அவ­ரைக் கேட்­டுக்­கொண்­டார். அதன்­பின்­னர் முகக்­க­வ­சம் அணிந்த அந்த ஆட­வர், ஓட்­டு­நரை இழி­வா­கப் பேசி­னார்.

இதை­ய­டுத்து, போலி­சுக்­குத் தக­வல் தெரி­வித்த ஓட்­டு­நர், அவர்­கள் வரு­வ­தற்­காக பாசிர் ரிஸ் டிரைவ் 1 புளோக் 210க்கு முன்­பா­கப் பேருந்தை நிறுத்­தி­னார். இதை­ய­டுத்து, ஓட்­டு­நரை அந்­தப் பயணி தாக்­கத் தொடங்­கி­னார்.

அப்­போது, ஆட­வர் மூவர் குறுக்­கிட்டு அந்­தப் பய­ணி­யைத் தடுத்து நிறுத்தி, அவ­ரைப் பேருந்­தில் இருந்து இறக்கி, போலிஸ் வரும் வரை மடக்­கிப் பிடித்­தி­ருந்­த­னர்.

நிதி ஆலோ­ச­கர் கிள­மென்ட் டான் ஸி ஹாவ், 29, பல்­க­லைக்­கழக மாண­வர் முகம்­மது முத்­தா­சிம் காசிம், 25, ஆகி­யோ­ர் உத­விக்கு வந்த மூவ­ரில் இரு­வர். மூன்­றா­ம­வர் யாரென அடை­யா­ளம் காண முடி­ய­வில்லை.

தெம்­ப­னிஸ் பேருந்­துச் சந்­திப்பு நிலை­யத்­தில் நடந்த பாராட்டு நிகழ்ச்­சி­யில் அவ்­வி­ரு­வ­ருக்­கும் சான்­றி­த­ழும் உண­வுக்­கூ­டை­யும் வழங்­கப்­பட்­டன.

தாக்­கு­த­லில் காய­முற்ற பேருந்து ஓட்­டு­நர் சுய­நி­னை­வு­டன் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

அவ­ருக்கு மூன்று நாட்­கள் மருத்­துவ விடுப்பு அளிக்­கப்­பட்­டது. தாக்­கு­த­லில் இறங்­கிய ஜாஃபாலி அப்­துல் ரஹிம் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வம் குறித்த காணொளி எஸ்­பி­எஸ் டிரான்­சிட் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

இவ்­வாண்­டில் இது­வரை பொதுப் பேருந்து ஓட்­டு­நர்­கள் கிட்­டத்­தட்ட 40 பேர் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் அவற்­றில் பாதி முகக்­க­வ­சம் தொடர்­பா­னவை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த ஆண்­டில் இத்­த­கைய 33 சம்­ப­வங்­கள் பதி­வா­கின என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon