வசதிகுறைந்த சிறார்களுக்கு உதவி

வசதிகுறைந்த நிலை, குடும்ப வன்­முறை, கற்­றல் சவால்­கள் போன்ற பல­வித பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் சிறார்­க­ளுக்குக் குறைந்த விலை­யில் தர­மான கல்­வியை வழங்கி வரு­கிறது ‘சைல்ட் அட் ஸ்தீ­ரிட் 11’ அற­நி­று­வன அமைப்பு.

இந்த அமைப்­பின் முயற்­சி­க­ளுக்­குக் கைகொ­டுக்க மெய்­நி­கர் நிதி திரட்டு முயற்சி ஒன்று இம்­மா­தம் 8ஆம் தேதி நடை­பெற்­றது.

“பெற்­றோர்­க­ளின் வேலை இழப்­பா­லும் வரு­மானக் குறை­வா­லும் அவர்­க­ளின் குழந்­தை­கள் உணர்­வுப்­பூர்­வ­மாக மற்­றும் கல்வி பிரச்­சி­னை­க­ளால் அவ­தி­யு­று­வ­தைப் பார்ப்­ப­தற்கு வருத்­தத்தை அளிக்­கிறது. தற்­போது சமு­தா­யத்­தில் ஆக அதிக பாதிப்­புக்கு ஆளா­கும் நிலை­யில் உள்­ளோர், குழந்­தை­கள். இவர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்­கா­விட்டால் எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­னர் பாதிக்கப்படுவர்,” என்­றார் நிலை­யத்­தின் தலைமை நிர்­வா­கி­யும் நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரு­மான திருவாட்டி எம். நிர்­மலா.

நிலை­யத்­தின் வழி தற்­போது 60 சிறார்­கள் பயன் அடை­கின்­ற­னர். கொவிட்-19 கொள்ளை நோயால் இவ்­வாண்­டின் நிதி திரட்டு முயற்­சி­யில் பல­த­ரப்­பட்ட சவால்­கள் ஏற்­பட்­டன என்­றும் முதல் முறை­யாக மெய்­நி­கர் நிதி திரட்டு முயற்சி நடந்­தது என்­றும் சொன்­னார் அவர்.

ஏறத்­தாழ ஒரு மணி நேரம் நீடித்த நிகழ்ச்­சி­யில் ஆடல், பாடல் அங்கங்களுடன் நிதி திரட்ட நேரடி ஏல­விற்­பனை அங்­கமும் இடம்­பெற்­றது. புத்­த­கங்­கள், ஓவி­யங்­கள், உள்­ளூர் விடு­தி­களில் தங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் போன்­றவை ஏலத்­தில் விற்­கப்­பட்­டன. அங் மோ கியோ, பிளோக் 102ல் இந்த நிலை­யம் 1999ஆம் ஆண்டு முதல் செயல்­ப­டத் தொங்­கி­யது. அந்த கால­கட்­டத்­தில் அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த திரு இந்­தர்­ஜித் சிங், நிலை­யத்தை உரு­வாக்க இடம் ஒன்­றைப் பார்த்ததுடன் அர­சாங்­கத்­து­டன் இணைந்து செய­லாற்­று­வ­தி­லும் முக்­கிய பங்­காற்­றி­னார்.

ஓய்­வு­பெற்ற அர­சி­யல்­வா­தி­யான திரு சிங், மெய்­நி­கர் நிகழ்­வில் கலந்­து­கொண்டு பேசி­னார்.

“நிலை­யத்­தின் ஆரம்­பக்­கால சிறார்­கள் பலர் இன்று பெரி­ய­வர்­கள் ஆகி­யி­ருப்­பர். வேலை செய்து­கொண்டோ படித்­துக்­கொண்டோ இருப்­பர். ‘சைல்ட் அட் ஸ்தீ­ரிட் 11’ நிலை­யத்­தின் உன்­ன­தச் சேவையை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். இது ஒரு பய­னுள்ள திட்­டம் என்று நினைக்­கி­றேன், மன­நி­றைவு தரும் ஒன்­றும்­கூட,” என்­றார் திரு சிங்.

நிலை­யத்­திற்­கான செல­வு­கள் ஒரு மாதம் $70,000 முதல் $80,000 வரை எட்­டு­கிறது. திரட்­டப்­படும் நிதி ஆரோக்­கி­ய­மான உண­வு­வகை­கள், தர­மான கல்வி, சுத்­த­மான ஆடை­கள் போன்­ற­வற்­றுக்­குச் செல­வி­டப்­படும் என்று நம்­பிக்­கை­ய­ளித்­தார் நிர்­மலா.

பொது­மக்­கள் இந்த நிலை­யத்­திற்கு எந்­நே­ரத்­தி­லும் நன்­கொடை வழங்­க­லாம். இணை­யம்­வழி நன்­கொடை செலுத்­தும் வச­தி­யும் உண்டு. 100 வெள்­ளிக்­கும் அதி­க­மாக நன்­கொடை அளிப்­ப­வர்­கள் வரி கழி­விற்­குத் தகுதி பெறு­வார்­கள்.

நன்­கொடை வழங்க https://www.giving.sg/child-at-street-11-ltd/help_children_keep_on_lear… இணைப்பை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!