சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய தற்காப்பு உறவு மறுவுறுதி

சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நீண்­ட­கால, நெருக்­க­மான தற்­காப்பு உறவை மறு­வு­று­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

சிங்­கப்­பூ­ருக்கு வந்­துள்ள ஆஸ்­தி­ரே­லிய தற்­காப்பு அமைச்­சர் லிண்டா ரெனால்ட்ஸ் நேற்று தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென்­னைச் சந்­தித்­துப் பேசி­னார்.

தற்­காப்பு தலை­மை­ய­கத்­தில் இந்­தச் சந்­திப்பு நடை­பெற்­றது.

அப்­போது வட்­டார, அனைத்­துலக தற்­காப்பு மேம்­பா­டு­கள், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான ஒத்து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தன் அவசியம் உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து இரு­வ­ரும் ஆலோ­சித்­த­னர் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குயின்ஸ்­லாந்­தில் உள்ள ஷோல்­வாட்­டர் பேயில் உள்ள பயிற்சி தளத்­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் பயிற்­சி­யில் ஈடு­பட்டு 30 ஆண்­டு­கள் ஆன­தைக் கொண்­டா­டும் வேளை­யில், அமைச்­சர் ரெனால்ட்­சின் வருகை முக்­கி­யம் வாய்ந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது என்று அமைச்சு கூறி­யது.

இஸ்­தா­னா­வில் பிர­த­மர் லீ சியன் லூங்­கை­யும் அமைச்­சர் ரெனால்ட்ஸ் சந்­தித்­துப் பேசி­னார்.

பிர­த­மர் லீ பின்­னர் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் இவ்­வட்­டார அனைத்­து­லகப் பாது­காப்பு சவால்­களை எப்­படி சேர்ந்து எதிர்­கொள்­வது என்­பது பற்றி அவ­ரி­டம் கலந்­து­ரை­யா­டி­ய­தாகவும் தெரி­வித்­தார்.

இரு நாடு­க­ளுக்கும் இடை­யிலான ஒத்­து­ழைப்பை மேலும் வலுப்­ப­டுத்த அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

அமைச்­சர் ரெனால்ட்ஸ், ஒரு நாள் அறி­மு­கப் பய­ணம் மேற்­கொண்டு நேற்று சிங்­கப்­பூர் வந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!