கவலை தீர்த்த கலை

வெவ்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 420 சைவ உணவு வகை­க­ளின் சின்­னஞ்­சி­றிய வண்­ணக் களி­மண் மாதி­ரி­களை உரு­வாக்கி வீட்­டில்­உள்ள தமது நவ­ராத்­திரி கொலு கண்­காட்­சி­யில் வைத்­தி­ருக்­கி­றார் திரு­வாட்டி மீனாட்சி ராம், 52.

கொரோனா கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் அதி­க­ரித்த தமது மனக்கவ­லையை எதிர்­கொள்ள இந்த முயற்சி பெரி­தும் உத­வி­ய­தாக நரம்பு மற்­றும் இத­யம் தொடர்­பான நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள திரு­வாட்டி மீனாட்சி கூறி­னார்.

தோசை, பொங்­கல், ‘போண்டா’, ‘வடா பாவ்’ ஆகி­ய­வற்­று­டன் சீனர்­க­ளின் மூன்­கேக், டம்ப்­ளிங், ஹோர்­ஃபான், மலாய்க்­கா­ரர்­க­ளின் குவே லாப்­பிஸ், லத்­தின் அமெ­ரிக்­கர்­க­ளின் நாச்­சோஸ், சூரோஸ், புரிட்­டோஸ் எனப் பல்­வேறு பதார்த்­தங்­க­ளின் மாதிரி வடி­வங்­களை இவர் மிகத் துல்­லி­ய­மாக உரு­வாக்கி, தெய்வ உரு­வங்­க­ளு­டன் கூடிய பல படி­க­ளைக் கொண்ட கொலு­வுக்­குப் பக்­கத்­தில் வைத்­தி­ருக்­கி­றார். ஒவ்­வோர் ஆண்­டும் புதிய கருப்­பொ­ரு­ளு­டன் இத்­த­கைய படைப்­பு­களை உரு­வாக்கி வரும் திரு­மதி மீனாட்சி, இந்­தச் சின்­னஞ்­சிறிய, மிக நுணுக்­க­மான கைவி­னைப் பொருட்­களை வடி­வ­மைக்க எவ்­வி­தப் பயிற்­சி­யை­யும் பெற­வில்லை என்­றும் சுய­மாக அனைத்­தை­யும் செய்­வ­தா­க­வும் கூறி­னார்.

‘ஃபைப்ரோ­மி­யல்­ஜியா’, ‘ஆட்டோ இம்­மூன் டிஸ்­ஆர்­டர்’ ஆகிய நரம்பு சம்­பந்­த­மான நோய்­க­ளைக் கொண்ட திரு­வாட்டி மீனாட்­சி­யின் இத­யத்­திற்­குள் ‘டிபிப்­ரில்­லேட்­டர்’ கரு­வி­யும் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

“பொது­வா­கவே என் மனை­விக்கு மருத்­து­வக் கண்­கா­ணிப்பு அதி­கம் தேவைப்­ப­டு­கிறது. கொவிட்-19 பர­வல் தொடங்­கி­ய­போது ஏதே­னும் அவ­ச­ரம் ஏற்­பட்­டால் மட்­டும் வரும்­படி மருத்­து­வர்­கள் எங்­க­ளி­டம் கூறி­விட்­ட­னர். இது எங்­களை மேலும் கவ­லை­யில் ஆழ்த்­தி­யது,” என்று திரு­மதி மீனாட்­சி­யின் கண­வர் திரு ராம் வி. ஐயர், 57, தெரி­வித்­தார்.

ஆயி­னும், மனதை அலைய விடா­மல் கடந்த ஜன­வரி முதல் செப்­டம்­பர் வரை ஒவ்­வொரு கைவி­னைப் பொரு­ளை­யும் கச்­சி­த­மாக உரு­வாக்­கிய திரு­வாட்டி மீனாட்சி, முடி­வில் மன­தி­ருப்­தி­யை­யும் நிம்­ம­தி­யை­யும் உணர்­வ­தா­கத் தெரி­வித்­தார்.

“இந்த ஒன்­பது நாள் பண்­டிகை, தீமையை நன்மை வெல்­வது பற்­றி­யது. இந்­தக் கலைப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­தன் மூலம் எனக்­குள் இருந்த எதிர்­மறை உணர்­வு­களை முறி­ய­டித்­து­விட்­டேன்,” என்று திரு­மதி மீனாட்சி கூறி­னார்.

கைவி­னைப் பொருட்­கள் மட்­டு­மின்றி ஆடை, ஆப­ரண அலங்­கா­ரம் செய்­வது, தஞ்­சா­வூர் ஓவி­யங்­க­ளைத் தீட்­டு­வது, சீன ஓவி­யங்­களை வரை­வது போன்­ற­வற்­றி­லும் தேர்ச்சி பெற்ற தமது தாயாரை நினைத்து வியப்படைவதாகக் கூறினார் திரு­வாட்டி மீனாட்­சி­யின் மக­ள் நிரஞ்­சனா ராம், 23.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!