வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஓய்வுக்கால வருமானம்

விளம்பரச் செய்தி | வழங்குவது மத்திய சேம நிதி கழகம்

வாழும் வரையில் ஓய்வுக்கால சேமிப்பு தீர்ந்துவிடாமல் இருக்க உங்களுக்கு மாதாந்தர வழங்குதொகை வழங்கும் திட்டமே மசேநி லைஃப் (CPF LIFE). இங்கு ‘லைஃப்’ என்ற ஆங்கில சொல், முதியவர்கள் வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய வருமானத்தைக் குறிக்கிறது. இதுவே அதன் நோக்கத்தையும் பிரதிபலிக்கின்றது. பின்வரும் ஐந்து விவரங்கள், நீங்கள் அறிய வேண்டியவை:

1) மசேநி லைஃப் திட்டம் எனக்கு ஏன் தேவை?

வாழ்வில் நமது கட்டுப்பாட்டையும் கடந்து பல விஷயங்கள் இருப்பதால், வருங்காலத்துக்குத் திட்டமிடுதல் ஒரு சவாலாகவே அமையும். இருந்தாலும் நமது ஆயுட்காலம் நீடிப்பதும் ஓய்வுக்காலத்தில் அதிகமான ஆண்டுகளை அனுபவிப்பதும் நிச்சயமானது எனலாம். தற்போது 65 வயதை எட்டிய சிங்கப்பூரர்களில் பாதி பங்கு 85 வயதை கடந்து வாழ்வார்கள் என்றும் மூன்றில் ஒரு பங்கு 90 வயதைக் கடந்து வாழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவத் துறையின் முன்னேற்றங்களால் ஆயுட்காலம் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்புள்ளது.

முதுமை அடையும் காலத்தில் வருமானம் ஈட்டுவது சிரமமாகலாம். சேமிப்புகள் வற்றிப்போன சூழ்நிலையை எதிர்கொள்ளாமல், பிள்ளைகளுக்கு பாரமாக அமையாமல், கவலையில்லாத ஓய்வுக்காலத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

எத்தனை காலம் வாழ்ந்தாலும், சேமிப்பு தீர்ந்துவிட்டாலும், மசேநி லைஃப் (CPF LIFE) இருக்கும் வரையில் வாழ்நாள் முழுவதும் மாதாந்தர வழங்குதொகைக் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம்.

2) மசேநி லைஃப் திட்டம் எவ்வாறு கவர்ச்சியானதாகின்றது?

மசேநி லைஃப் திட்டத்தில் போடும் ஓய்வுக்காலச் சேமிப்புகளுக்கு ( செலுத்தும் காப்புறுதிக் கட்டணம் என்றும் அறியப்படும்) கவர்ச்சியான மாதாந்தர வழங்குதொகைகளை மசேநி லைஃப் (CPF LIFE) வழங்குகிறது. வருடத்திற்கு 6 விழுக்காடு வரையிலான அதிகமான வட்டியை அரசாங்கம் வழங்குவதால் இது சாத்தியமாகிறது.

நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஒரு தனியார் வர்த்தக ஓய்வூதியக் காப்புறுதித் திட்டத்தில் நீங்கள் இருந்து, அதன்வழி உங்களுக்கு இதற்கு சமமான அல்லது இதைவிடக் கூடுதலான மாதாந்தர வழங்குதொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டால், நீங்கள் மசேநி லைஃப் திட்டத்தலிருந்து விலகிக்கொள்ள விண்ணப்பித்து, உங்களின் மசேநி ஓய்வுக்காலச் சேமிப்புகளை வெளியே எடுத்துக்கொள்ளலாம்.

3) மசேநி லைஃப் திட்டங்களை நான் எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எவ்வித ஓய்வுக்கால வருமானம் உங்களுக்குத் தேவை என்பதை நீங்களே ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.

ஆண்டுகள் கடந்து செல்ல பொருளாதாரச் செலவுகள் கூடுவதைக் கண்டு நீங்கள் கவலை அடைந்தால், ஆண்டுதோறும் உயரக்கூடிய ஓய்வுக்கால வருமானம் உங்களுக்குத் தேவை. நிலையாய் உயரும் திட்டத்தில் (Escalating Plan) இதற்கான ஏற்பாடுகள் உள்ளன.

பொருட்களின் விலைவாசி ஆண்டுதோறும் கூடினாலும் ஒரு குறிப்பிட்ட வரவுசெலவு அட்டவணைக்குள் கட்டுப்பட்டு, குறைவாகவே செலவு செய்துகொள்பவராக இருக்க நீங்கள் விரும்பலாம். அதற்கு வழக்கத் திட்டம் (Standard Plan) ஒரு நிலையான வழங்குதொகையைத் தருகிறது.

குறைவான மாதாந்தர வழங்குதொகையுடன் தொடங்கி, வருங்கால நாட்களில் படிப்படியாக அது குறைவதில் உங்களுக்குப் பிரச்சினை இல்லை என்றால் அடிப்படைத் திட்டம் (Basic Plan) போதும்.

உங்களின் சுய மதிப்பீட்டை பொறுத்தே நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் அமையும். இந்த மூன்று திட்டங்களும் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு அளவில் வழங்குதொகைகளை வழங்கும். பெறப்பட்ட வட்டிகளை நீங்கள் அனுபவிப்பதற்கு இம்மூன்று திட்டங்களும் வழிவகுக்கின்றன. உங்களின் மறைவுக்குப் பிறகு, பயன்படுத்தப்படாத ஓய்வூதியக் காப்புறுதிக் கட்டணங்கள் எதாவது இருந்தால், அவை நீங்கள் நியமித்துள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

4) மசேநி லைஃப் திட்டம் வழி மாதந்தோறும் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?

மசேநி லைஃப் திட்டத்தைத் தேர்வு செய்தவுடன் திட்டத்தில் சேரும் காலத்தில் ஓய்வுக்காலக் கணக்கில் (Retirement Account) நீங்கள் இருப்பில் வைத்துள்ள தொகையைப் பொருத்தே பொதுவாக மாதாந்தர வழங்குதொகை நிர்ணயிக்கப்படும்.

எழுபது வயது வரை வழங்குதொகை தொடங்குவதைத் தள்ளி வைத்தல், அல்லது ஓய்வுக்காலக் கணக்கில் (Retirement Account) மேம்படுத்தப்பட்டத் தொகையின் (Enhanced Retirement Sum) வரம்புவரை பணத்தை நிரப்புதல் ஆகிய நடவடிக்கைகள் வழி மாதாந்தர வழங்குதொகையை நீங்கள் கூடுதலாக்கலாம். தள்ளிவைக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் உங்களது வழங்குதொகைகள் ஏழு விழுக்காடு வரை கூடுதலாகும்.

எத்தனை காலம் வாழ்ந்தாலும், குறைந்தபட்சமாக மசேநி லைஃப் திட்டத்தில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும். உங்கள் ஓய்வூதியக் காப்புறுதிக் கட்டணம் பயன்படுத்தப்படும் முன்பே நீங்கள் மறைந்து விட்டால், மீதம் உள்ள தொகை உங்கள் பயனாளிகளிடம் வழங்கப்படும்.

5) மசேநி லைஃப் திட்டத்தின் கீழ் நான் இல்லையென்றால், எனக்கு மாதாந்தர வழங்குதொகை கிடைக்குமா?

ஓய்வுக்காலத் தொகை திட்டத்தின் (Retirement Sum Scheme) கீழ் உங்களுக்கு மாதாந்தர வழங்குதொகைக் கிடைத்தாலும், ஓய்வுக்காலக் கணக்கில் (Retirement Account) சேமிப்புகள் தீர்ந்ததும் அந்த மாதாந்தர வழங்குதொகை நிறுத்தப்படும். அதனால், வாழும் வரையிலும் மாதாந்தர வழங்குதொகைகள் பெறக்கூடிய மசேநி லைஃப் திட்டத்தில் சேர்ந்துகொள்வது பொதுவாகவே நல்லது.

நீங்கள் தற்போது ஓய்வுக்காலத் தொகை திட்டத்தில் (Retirement Sum Scheme) இருந்து, மசேநி லைஃப் (CPF LIFE) திட்டத்தில் சேர விரும்பினால், ஆகக் கடைசியாக உங்களது 80ஆம் பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் cpf.gov.sg/cpflifeapp என்ற இணையத்தளம் வழி சிங்பாஸ் மறைச்சொல்லைப் பயன்படுத்தி மின்னியல் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!