மசேநிதி பயன்பாடு, வீவக கடன் விதிமுறைகளில் மாற்றம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பழைய வீடுகளை வாங்க இனி மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து கூடுதல் பணத்தைப் பயன்படுத்த லாம்.

ஆனால் இந்தச் சலுகையைப் பெற வீட்டின் உரிமையாளர்கள் இருவரில் இளையவராக இருப்ப வரின் வயது 95ஆக இருக்கும் போது வீட்டின் குத்தகைக்காலம் முடிந்திருக்கக்கூடாது.

மேலும் மறுவிற்பனை வீட்டை வாங்கினால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வழங்கும் அதிகபட்சக் கடனான வீட்டின் விலையின் 90 விழுக்காட்டுத் தொகையை அவர் கள் கடனாகப் பெறலாம்.

இதுகுறித்து மனிதவள அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டன.

முதுமைக் காலத்தில் வீடு இருப்பதை இந்த மாற்றம் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 85ஆக இருப்பதால் இந்த மாற்றம் அவசியம் என்று கூறப்படுகிறது.

பழைய வீடுகள் வாங்குவதற்கு வேறு சில காரணங்களும் இருப் பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

பெற்றோருக்கு அருகில் வசிக்க சிலர் பழைய வீடுகளை வாங்குகின்றனர்.

அறிமுகப்படுத்தப்படும் மாற்றங் களால் பெரும்பாலானோர் பாதிக் கப்படமாட்டார்கள்.

வீவக வீட்டு உரிமையாளர்களில் 98 விழுக்காட்டினரும் தனியார் வீட்டு உரிமையாளர்களில் 99 விழுக்காட்டினரும் 95 வயது ஆகும்போதும் அவர்களது வீடு களின் குத்தகைக்காலம் முடி யாமல் இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது.

விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை அடுத்து, பழைய வீடுகளை நடுத்தர வயதினர் வாங்கும்போது மத்திய சேமநிதி பயன்பாட்டில் அவ்வளவு கெடுபிடி இருக்காது.

உதாரணத்துக்கு, 50 ஆண்டு குத்தகைக்காலம் எஞ்சியிருக்கும் வீட்டிற்கு 45 வயது தம்பதியர் கூடுதல் மத்திய சேமநிதி பணத்தைப் பயன்படுத்தலாம்.

வீட்டின் விலையை அவர்கள் மத்திய சேமநிதியைப் பயன்படுத்தி முழுமையாக அடைக்கலாம்.

விதிமுறை மாற்றத்துக்கு முன்பு வீட்டின் விலையில் 80 விழுக்காட்டை மட்டும் மத்திய சேமநிதியைக் கொண்டு அடைக் கலாம். ஆனால் பழைய வீடுகளை வாங்கும் இளையர்களுக்குக் கூடுதல் ரொக்கம் தேவைப்படும்.

புதிய மாற்றங்களின்படி 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான குத்தகைக்காலம் கொண்ட வீடுகளை வாங்க மத்திய சேமநிதி மற்றும் வீவக கடனைப் பயன்படுத்த முடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!