உங்களது ஓய்வுக்காலக் கணக்குகளைத் திட்டமிடுதல்

ஓய்வுக்காலத்துக்கு முன்னரே திட்டமிட்டு செயல்படுதல், முதுமையடையும் காலத்தில் நமக்கு நிம்மதியை வழங்கும். மசேநி உங்களின் ஓய்வுக்காலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிடும், ஆகையால் யூகங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய மசேநி எண்ணிக்கைகள் பின்வருகின்றன.

வாழ்நாள் முழுவதும் ஓய்வுக்கால வழங்குதொகைகள்

$1,390 - $1,490*

65வது வயதில் மசேநி ஓய்வுக்காலக் கணக்கில் $272,900 சேமிப்புடன் மசேநி லைஃப் திட்டத்தில் நீங்கள் சேர்ந்துகொண்டால், ஒவ்வொரு மாதமும் இந்த வழங்குதொகையைப் பெற எதிர்பார்க்கலாம். இந்த தொகை மிகவும் அதிகமாகத் தோன்றலாம். ஆனால் தற்போதைய முழுத் தொகை அளவான $181,000 சேமிப்பை நீங்கள் ஒதுக்கிவைத்தால், சிறந்த மசேநி வட்டித்தொகையுடன் 55 வயதில் அந்த அளவை நீங்கள் அடையலாம். இதைவிட அதிக வழங்குதொகைகள் தேவையென்றால் உங்கள் ஓய்வுக்காலக் கணக்கில் மேலும் அதிகமாக பணத்தை நிரப்பிக்கொள்ளலாம்.

மூன்று வகையான மசேநி லைஃப் திட்டங்கள் உள்ளன.

நிலையாய் உயரும் திட்டம் (Escalating Plan), வழக்கத் திட்டம் (Standard Plan), அடிப்படைத் திட்டம் (Basic Plan) என்பன அவை. உகந்த திட்டம் எது என்பதை நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உயரும் விலைவாசியை சமாளிக்க ஆண்டுதோரும் வளர்ந்துகொண்டே செல்லும் மாதாந்தர வழங்குதொகை ஒரு தேர்வு வகை. ஆண்டுகள் கடந்து செல்ல பொருட்களின் விலை ஏற்றத்தால் அதிகம் வாங்கிச் செலவு செய்யமுடியாமல் போனாலும் நிலையான வரவுசெலவு பட்டியல் முறையில் குறிப்பிட்ட தொகையைப் பெறுவது மற்றொரு தேர்வு வகை. மூன்கூட்டியே திட்டமிட்டு உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளுக்கு ஏற்ப மசேநி சேமிப்பை சேகரியுங்கள்.

*2020ம் ஆண்டில் 55 வயதை எட்டியுள்ள ஒரு மசேநி உறுப்பினரின் மசேநி லைஃப் வழக்கத் திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.

உங்கள் வழங்குதொகை தொடங்கும் வயது

65

65 வயதை அடைந்ததும் எந்த நேரத்திலும் மாதாந்தர வழங்குதொகையைப் பெற ஆரம்பிக்கலாம்.

ஆயினும், உங்களுக்கு உடனடி தேவைகள் இல்லையென்றால், வழங்குதொகைப் பெறுவதை நீங்கள் தள்ளிவைத்துக்கொள்ளலாம். நீங்கள் தள்ளிவைக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் வழங்குதொகை 7% வரை அதிகரிக்கும். 70 வயதிலிருந்து பெற்றுக்கொள்ள தேர்வுசெய்தால், 35% வரை அதிகமான மாதாந்தர வழங்குதொகைகளைப் பெறமுடியும்.

வழங்குதொகைப் பெறுவதைத் தொடங்குவதற்கு 70 வயது வரை உங்களுக்கு வரம்பு உள்ளது. அதன்பிறகு தானாகவே அவை தொடங்கப்படும்.

ஓய்வுக்கால மசேநி சேமிப்பை வளர்த்திடுங்கள்

ஆண்டுக்கு 6% வரை

நல்ல வட்டித்தொகைகளை வழி உங்களின் மசேநி சேமிப்பை வளர்ப்பதற்கு அரசாங்கம் உதவுகிறது.

55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதான சிங்கப்பூரர்கள், மொத்த மசேநி சேமிப்பில் உள்ள முதல் $30,000க்கு 6% பெறுகின்றனர். அடுத்த $30,000க்கு 5% பெறுகின்றனர்.

55 வயதை அடைவதற்குள் சிறப்பு கணக்கிலும் ஓய்வுக்காலக் கணக்கிலும் சிறிய தொகைகளை நிரப்பி ஓய்வுக்காலச் சேமிப்பை வளர்க்கலாம்.

ஒரு நாளுக்கு $5 மட்டும் உங்கள் மசேநி சேமிப்பில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினால், 15 ஆண்டுகளில் கூட்டு வட்டியின் சக்தியால் நிகர தொகையாக $35,000** க்கும் மேல் ஈட்டலாம்.

காலம் தாழ்த்தாமல் முன்கூட்டியே மசேநி கணக்கில் தொகை நிரப்பினால் அதிக பலனை அடைவீர்கள்.

**உங்கள் சிறப்பு (SA) அல்லது ஓய்வுக்காலக் கணக்குகளின் (RA) அடிப்படை வட்டியான, ஓராண்டுக்கு 4%, என்ற வட்டி வீதத்தின் மீது கணக்கிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!