சிங்கப்பூர் பாதுகாப்பான சந்திப்பு இடமாகலாம்

கொரோனா கிரு­மித்­தொற்று சூழ­லி­லும் வர்த்­த­கங்­கள் இணை­வ­தற்­குப் பாது­காப்­பான, பத்­தி­ர­மான ஒரு சந்­திப்பு இட­மாக சிங்­கப்­பூர் உரு­வெ­டுக்­கும் வாய்ப்பு உள்­ளது.

வட்­டார நாடு­க­ளின் மத்­தி­யில் முக்­கி­ய­மான பயண, இடை­மாற்­றப் பயண மைய­மா­கத் திகழ்­வ­தால் சிங்­கப்­பூர் இத்­தகைய பாது­காப்பை வழங்­கும் சாத்­தி­யம் உண்டு என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார்.

“வரு­கை­யா­ளர்­க­ளின் சுகா­தா­ரத்­தை­யும் பாது­காப்­பை­யும் விரை­வான, மேம்­ப­டுத்­தப்­பட்ட முறை­யில் உறு­தி­செய்­ப­வ­ருக்கே இப்­போட்­டி­யில் சாத­க­நிலை. இதை சிங்­கப்­பூர் அறிந்­துள்­ளது. வட்­டா­ரத்­தில் முன்­ன­ணி­யில் இருப்­போ­ரில் சிங்­கப்­பூ­ரும் இடம்­பெற எண்­ண­ம் உண்டு,” என்­றார் திரு சான்.

“இத்­த­கைய ஆற்­றல்­களை மேன்­மே­லும் வளர்த்­துக்­கொண்டு அவற்­றைச் செயல்­ப­டுத்­தி­னால் போட்­டி­யாக இருக்­கும் மற்­ற­வர்­களி­ட­மி­ருந்து நாம் தனிச்சிறப்புடன் விளங்குவோம்,” என்­றார்.

பய­ணம் தொடர்­பில் சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்­றும் மாநாட்டு நிலை­யத்­தில் இரண்டு நாள் நடை­பெற்று வரும் ‘டிரா­வல்­ரி­வைவ்’ நிகழ்­வில் திரு சான் இவ்­வாறு பேசி­யி­ருந்­தார். ‘மைஸ்’ எனப்­படும் கூட்­டங்­கள், ஊக்­கு­விப்­பு­கள், மாநா­டு­கள் மற்­றும் கண்­காட்­சி­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­பாடு செய்­யத் தகுந்த ஒரு முன்­னணி இட­மாக சிங்­கப்­பூர் மாற விரும்­பு­வது குறித்­தும் அவர் பேசி­னார்.

நாடு­க­ளுக்கு இடையே இருக்­கும் கொரோனா கிருமி தொடர்­பான பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளால் வர்த்தகச் சந்திப்புக் கூட்டங்கள் நடத்த முடியாமல் போகலாம். அந்­நே­ரத்­தில் சிங்­கப்­பூர் ஏற்ற ஒரு சந்­திப்பு இட­மா­கத் தன்னை அமைத்­துக்­கொள்­ளும் திட்­டத்தை அமைச்­சர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர் பய­ணக் கழ­கம், ‘மெஸ்ஸெ பெர்­லின் (சிங்­கப்­பூர்)’ ஆகி­யவை இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘டிரா­வல்­ரி­வைவ்’, புதிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களு­டன் சிங்­கப்­பூ­ரில் நடக்­கும் முதல் வர்த்­தக நிகழ்­வா­கும். தானி­யக்க முன்­ப­தி­வுச் சாவ­டி­கள் போன்­றவை நிகழ்­வுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

கொரோனா கிருமி பர­வல் தொடங்­கி­யது முதல் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தி­லேயே நடை­பெ­றும் முதல் நேரடி அனைத்­து­லக வர்த்­தக நிகழ்­வும் இதுவே என்று கழ­கம் குறிப்­பிட்­டது.

கொரோனா கிரு­மித்­தொற்று தொடங்­கி­யது முதல் சிங்­கப்­பூ­ரில் முன்­னோ­டித் திட்­ட­மாக நடை­பெறும் முதல் ‘மைஸ்’ நிகழ்­வும் இது என்று கூறப்­பட்­டது.

இதில் சுமார் 1,000 பங்­கேற்­பாளர்­கள் நேர­டி­யாக வந்து கலந்து­கொள்­வர் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. சில பங்­கேற்­பா­ளர்­கள் நேர­லை­யா­க­வும் இதில் கலந்­து­கொள்­கின்­ற­னர். பங்­கேற்­பா­ளர்­களில் 15 நாடு­களைச் சேர்ந்த 65 வெளி­நாட்­டுப் பிர­தி­நி­தி­கள் அடங்­கு­வர். தற்­போது மற்ற ‘மைஸ்’ நிகழ்­வு­களில் 250 பேருக்கு மேல் கலந்­து­கொள்ள முடி­யாது.

‘மைஸ்’ திட்­டத்­தைப் பொறுத்­த­வரை, முன்­ன­தாக எந்த நிலை­யில் இருந்­தோமோ அதே நிலைக்­குச் செல்ல முயற்சி செய்­கி­றோம் என்று கூறி சிங்­கப்­பூர் தன்­னைத் தற்­காத்­துக் கொள்­ளப் போவ­தில்லை என்­றார் திரு சான். அதை­யும் தாண்டி, புதி­தாக ஒன்­றைச் சாதிக்­க­வும் தன்­னால் முடிந்த அள­வில் புது­வ­கை­யான அனு­ப­வங்­களை வழங்­க­வும் சிங்­கப்­பூர் முனைந்­துள்­ள­தாக அவர் கூறி­னார். சுகா­தார, பாது­காப்பு கார­ணங்­க­ளால் கொள்ளைநோயின் ஆரம்ப காலத்­தி­லேயே சிங்­கப்­பூர் அதன் எல்­லை­களை மூடி­ய­து­டன் பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் விதித்­தது. ஆனால் படிப்­ப­டி­யாக பய­ணங்­க­ளைத் தொடங்­க­வும் உல­கத்­து­டன் இணைப்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் இப்­போது நம்­பிக்கை பிறந்­துள்­ள­தாக அவர் சொன்­னார்.

‘மைஸ்’ பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளு­டன் நேர­டி­யா­க­வும் நேர­லை­யா­க­வும் நடை­பெ­றும் ‘டிரா­வல்­ரி­வைவ்’ நிகழ்வு, 2021ஆம் ஆண்­டின் முதல் காலாண்­டில் மேன்­மேலும் கூடு­தல் அனைத்­து­லக வர்த்­தக நிகழ்­வு­கள் இங்கு நடை­பெற வழி­வ­குக்­கும் என்ற நோக்­கத்­து­டன் நடை­பெ­று­கிறது.

பய­ணக் கழ­கம் நேற்று கண்­காட்சி ஏற்­பாட்­டா­ளர்­க­ளான ‘ஃபியேரா மிலானோ’, ‘மெஸ்ஸெ மியூ­நிக்’, ‘இன்­ஃபோர்மா டெக்’ ஆகி­யோ­ரு­டன் மூன்று புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளைச் செய்­து­கொண்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!