‘இணக்கம்’ நூல் வெளியீட்டு விழா

ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பும் இந்­திய முஸ்­லிம் பேர­வை­யும் இணைந்து ‘இணக்­கம்’ நூல் வெளி­யீடு நிகழ்ச்­சியை இம்­மா­தம் 20ஆம் தேதி மெய்­நி­கர் பாணி­யில் நடத்­தின. சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் இந்த நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்டார்.

“நல்­லி­ணக்­கம் என்­பது சம­யங்­களை­யும் நாட்டு எல்­லை­க­ளை­யும் கடந்­தது என்­ப­தையே இந்த இணக்­கம் நூல் தொகுப்பு சுட்­டிக் காட்டு­கிறது. அச்­சுப் பிரதி, மின்­நூல், ஒலி­நூல் ஆகிய மூன்று வடி­வங்­களில் பிர­சு­ரிக்­கப்­படும் இந்த நூலை உல­கெங்­கி­லும் உள்ள தமிழ் மக்­கள் படித்து பயன்­பெ­றும் வாய்ப்­பைப் பெறு­வர்,” என்று திரு சண்முகம் சொன்­னார்.

ஜாமியா அமைப்­பும் இந்­திய முஸ்­லிம் பேர­வை­யும் கடந்த பல ஆண்­டு­க­ளாக சமூ­கத்­திற்­குச் சிறந்த சேவை­யாற்றி வந்­துள்­ள­னர் என்­றும் இவ்­வி­ரண்டு அமைப்­பு­களும் இனம், சமய வேறு­பா­டின்றி சமு­தா­யத்­தில் பல்­வேறு நலப் பணி­களை ஆற்றி வரு­கின்­றன என்­றும் அமைச்­சர் சண்­மு­கம் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த ஐந்து கவி­ஞர்­களும் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த இரண்டு கவி­ஞர்­களும் எழு­திய தமிழ் கவி­தைப் படைப்பு­கள் இந்த நூலில் இடம்­பெ­று­கின்­றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமியா ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘வள்­ளல் நபி வழி­யில் வாழ்­வி­யல் பெரு­விழா’ என்ற நிகழ்­வின் ஒரு பகு­தி­யாக சிங்­கப்­பூர் இந்­திய முஸ்­லிம் பேர­வை­யு­டன் இணைந்து நடத்­திய கவி­ய­ரங்­கம் ஒன்­றில் இந்த ஏழு கவி­ஞர்­களும் படைத்து இருந்­த­ கவி­தை­க­ளைக் கொண்டு, 98 பக்­கங்­கள் உள்ள ‘இணக்­கம்’ நூல் தொகுக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்­கம், ஒற்­றுமை ஆகியவற்றை ஒட்டி இந்த நூல் தொகுக்­கப்­பட்டு உள்ளது. இந்த நூல் மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என்று ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் துணைத் தலை­வர் டாக்­டர் எச்.எம்.சலீம் தெரி­வித்­தார்.

பள்­ளி­கள், நூல­கங்­க­ளுக்கு ஏறத்­தாழ 500 அச்­சுப் பிரதி நூல்­கள் விநி­யோ­கிக்­கப்­படும். மின், ஒலி நூல்­க­ளைப் பெற விரும்­பு­வோர் ஜாமி­யா­வின் இணை­யத் தளத்தில் இடம்­பெறும் விண்­ணப்பப் படி­வத்­தில் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யு­டன் பதிவு செய்து நூலை பதி­வி­றக்­கம் செய்­யலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!