பாலியல் ஒழுங்கின்மையை எதிர்கொள்ள என்­யு­எஸ் கூடுதல் நடவடிக்கை

பாலி­யல் ஒழுங்­கின்­மையை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் தேசிய பல்கலைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்) கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. அண்­மை­யில் அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த சிலர் பாலி­யல் குற்­றங்­களில் சம்­பந்­த­பட்­டதை அடுத்து, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

பாலி­யல் ஒழுங்­கின்­மையை எதிர்­கொள்ள எடுக்­கப்­பட இருக்­கும் நட­வ­டிக்­கை­கள் குறித்து என்­யு­எஸ் மாண­வர்­க­ளுக்­கும், ஊழி­யர்­க­ளுக்­கும் முன்­னாள் மாண­வர்­க­ளுக்­கும் மின்­னஞ்­சல் மூலம் நேற்று சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டது.

பட்­டி­ய­லி­டப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் ஊழி­யர்­க­ளுக்­கும் மற்­ற­வர் களுக்­கும் பயிற்சி அளிப்­ப­தும் அடங்­கும்.

அடுத்த சில மாதங்­களில் பட்­டி­ய­லி­டப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் பெரும்­பா­லா­னவை நடை­மு­றைப்படுத்­தப்­படும்.

இந்­தப் பல்­க­லைக்கழ­கம் பாலி­யல் குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுக்க ஒரு கொள்­கையை உரு­வாக்­கத் திட்­ட­மி­டு­கிறது. அது மாண­வர்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் உரி­ய­தாக இருக்­கும்.

தனது ஊழி­யர்­கள், மாண­வர்­கள் தொடர்­பான பாலி­யல் ஒழுங்­கின்மை வழக்­கு­கள் பற்றி ஒவ்­வொரு ஆறு மாத­மும் என்­யு­எஸ் அறிக்கை வெளி­யி­டும்.

ஆனால் அந்த அறிக்­கை­களில் பாதிக்­கப்­பட்­ட­வரின் அடை­யா­ளம் வெளி­யி­டப்­ப­டாது. பாலி­யல் ஒழுங்­கின்­மையை அடை­யா­ளம் காண்­பது, அதை எதிர்த்து சரி­யான நட­வ­டிக்­கை­கள் எடுப்­பது குறித்து வழிப்­போக்­கர்­க­ளுக்­கும் பயிற்சி அளிப்­பது குறித்து என்­யு­எஸ் பரி­சீ­லித்து வரு­கிறது.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய அனை­வ­ரை­யும் மதிக்­கும் கலா­சா­ரம் கொண்ட வளா­கத்தை உரு­வாக்க பயி­ல­ரங்­கு­களை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

ஒரு­வேளை பாலி­யல் ஒழுங்­கின்மை குற்­றங்­கள் நடந்­தால் அதை எதிர்­கொள்­ளும் விதம் குறித்து பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்­க­ளுக்கு பயி­ல­ரங்­கு­களில் பயிற்சி அளிக்­கப்­படும் என்று என்­யு­எஸ் தலை­வர் டான் எங் சாய் தெரி­வித்­தார். தற்­போ­துள்ள பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான பரா­ம­ரிப்­புப் பிரிவு மாண­வர்­க­ளால் நடத்­தப்­ப­டு­கிறது. அந்­தப் பிரி­வின் பெயர் என்­யு­எஸ் பரா­ம­ரிப்­புப் பிரி­வாக மாற்­றப்­படும்.

என்­யு­எஸ் ஊழி­யர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்க அடுத்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டுக்­குள் இப்­பி­ரி­வுக்குத் தேவை­யான வளங்­கள் வழங்­கப்­படும்.

தனது வளா­கத்­தில் நிக­ழும் பாலி­யல் ஒழுங்­கின்மைக் குற்­றங்­கள் தொடர்­பாக பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கட்­டுப்­பாட்­டுக் குழு விசா­ரணை நடத்தி முடித்­த­தும் குற்­றம் புரிந்­த­வர் கைது செய்­யப்­பட வேண்­டும் என்று முடி­வெ­டுக்­கப்­படும் பட்­சத்­தில் இரண்டு வாரங்­க­ளுக்­குள் போலி­சா­ரி­டம் புகார் செய்­யப்­படும் என்­பதை உறுதி செய்ய

என்­யு­எ­ஸின் உள்­கட்­ட­மைப்பு செயல்­முறை கடு­மை­யா­ன­தாக்­கப்­படும் என்று பேரா­சி­ரி­யர் டான் தெரி­வித்­தார். பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்­கள் புரி­யும் பாலி­யல் ஒழுங்­கின்­மைக் குற்­றங்­களை எதிர்­கொள்ள குழு ஒன்றை என்­யு­எஸ் அமைத்­துள்­ளது. அக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­கள் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­பது குறித்து கூடிய விரை­வில் தெரி­விக்­கப்­படும் என்று என்­யு­எஸ் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!