மங்காத கொண்டாட்ட உணர்வு

அச்சுறுத்தும் கிருமிக்கும் அடங்கா மழைக்கும் நடுவே தித்திக்கும் திருநாள்

அச்­சு­றுத்­தும் கிருமித்­தொற்று, அடங்கா மழை-இவற்றுக்­கி­டை­யில் கொஞ்­ச­மும் குறை­யவில்லை பொங்­கல் கொண்டாட்ட ஏற்பாடுகள். பொது­வாக பொங்­க­லுக்­குத் தேவை­யான கரும்பு, மஞ்­சள்கொத்து, இஞ்­சிக்­கொத்து, மா இலை, வாழை இலை, பூ, பொங்­கல் பானை, காய்­க­றி­கள், அரிசி என அனைத்­தை­யும் தேடித் தேடி வாங்க வழக்­க­மாக லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்­டம் அலை­மோ­தும்.

ஆனால் இவ்வாண்டு அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கொண்டாட்ட உணர்வோடு வந்த மக்களைக் காண முடிந்தது.

கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாடு கார­ண­மாக தேக்­கா­வுக்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் வெகு­வா­கக் குறைந்து ­விட்­டது. மேலும், அண்­மைய நாட்

­க­ளா­கத் தொடர்ந்து பெய்து வரும் மழை­யும் லிட்­டில் இந்­தியா மக்கள் அதிகமாகக் கூடுவதில் சிரமத்தை எற்படுத்தியது. எவ்­வா­றி­ருப்­பி­னும் பொங்­க­லுக்­கான பொருட்­களை லிட்­டில் இந்­தி­யா­வில் வாங்­கியே தீரு­வது என்று வந்­து­செல்­வோரை நேற்று காண­மு­டிந்­தது.

கேம்­பல் லேனில் பொருட்களை வாங்க தமது இரு பிள்­ளை­க­ளு­டன் வந்­தி­ருந்த திரு ஜான­கி­ரா­மன் ஜெயக்­கு­மார், 40, திரு­மதி ஜெயக்­கு­மார் தேவகி, 30, இவ்­வாண்­டின் பொங்­கல் ஏற்­பா­டு­க­ளைப் பற்­றிய தங்­க­ளது உணர்­வு­களை தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

“வழக்­க­மாக பொங்­கல் திரு­ நா­ளை­யொட்டி லிட்­டில் இந்­தி­யா­வில் மக்­கள் கூட்­டம் நிறைந்­தி­ருக்­கும். இவ்­வாண்டு அதி­கமாகக் கூட்­டம் இல்லை. இருப்­பி­னும் கிரு­மித்­தொற்­றிற்கு இடையே இவ்­வ­ளவு ஏற்­பாடுகளைச் செய்­தி­ருப்­பது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­தான். கரும்பு விலை ஏற்­றம்­ மட்டும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு $5க்கு விற்­கப்­பட்ட கரும்பு இப்­போது $7க்கு விற்­கப்­ப­டு­கிறது. விலை ஏறி­னா­லும் பொங்­கல் கொண்­டாட்­டத்­திற்கு கரும்பை வாங்­கித்­தானே ஆக­வேண்­டும்,” என­ அவர்­கள் கூறி­னர்.

மஞ்­சள், இஞ்­சிக்­கொத்தை கைகளில் பிடித்­த­வாறே பொங்­கல் ஒளி­யூட்டை ரசித்­துக்­கொண்­டி­ருந்த திரு­மதி பொற்­செல்வி செல்­வ­ரத்­தி­னம், 53, “என்­ன­தான் பொருட்­களின் விலை ஏறி, கூட்­டம் குறைந்­தி­ருந்­தா­லும் கொண்­டாட்ட உணர்வு மட்­டும் எங்­க­ளை­விட்­டுப் போக­வில்லை,” என்று முகம் மலர கூறி­னார்.

லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் பொங்­க­லுக்­குத் தேவை­யான பொருட்­களை குறித்த காலத்திற்கு இறக்­கு­மதி செய்­வ­தில் இவ்­வாண்டு பல சவால்­களை எதிர்­கொண்­ட­னர்.

“மலே­சியா போன்ற பக்­கத்­துக்கு நாடு­க­ளி­லி­ருந்து பொங்­க­லுக்கு தேவை­யான பொருட்­களை இறக்­கு­மதி செய்­துள்­ளோம். இவ்­வாண்டு நாங்­கள் இறக்­கு­மதி செய்­துள்ள பொருட்­கள் முந்­தைய ஆண்­டு­களை காட்­டி­லும் 50% குறை­வா­கவே உள்­ ளன,” என்றார் பால­வீரா கடையின் விற்­பனை உத­வி­யா­ளர், திரு செல்­வேந்­தர், 27.

“விடாது மழை பெய்­தா­லும் எப்­போ­தும் பொருட்­கள் வாங்க வரும் உள்­ளூர்­வா­சி­கள் வந்­து­கொண்­டே­தான் இருக்­கின்­ற­னர். இந்த ஒரு வாரத்­தில் இன்­று­தான் கூட்­டம் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கிறது. வாடிக்­கை­யா­ளர்­கள் வந்­து­கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். முன்­பெல்­லாம் ஒரு வாரத்­திற்­குள் பொருட்­கள் வந்து இறங்­கி­வி­டும். இவ் வாண்டு இரு மாதங்­க­ளுக்கு முன்பே ‘ஆர்டர்’ செய்ய வேண்­டிய நிலை இருந்­தது,” என்று தெரிவித்தார் கார்த்திகா கடை விற்­பனை மேலா­ளர் திரு கோபு­கு­மார், 46.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!