மக்களிடம் நற்சிந்தனை வளர்த்த நம்பிக்கைப் பொங்கல்

மக்களிடம் நற்சிந்தனை வளர்த்த நம்பிக்கைப் பொங்கல்

2 mins read
c41566f7-531e-4d0f-be4f-79161e7f30c4
இடது படம்: மூன்று வயது மகள் விலா­ஷினியின் பிறந்தநாளையும் பொங்கல் திருநாளையும் நேற்று கோயில் வழிபாட்டுடன் கொண்டாடிய திரு அரவிந்த் குடும்பம். குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் இந்த மகிழ்ச்சி என்றும் நீடிக்க வேண்டும் என்பதே திரு அரவிந்தின் வேண்டுதல். படத்தில் திரு அரவிந்த், திருமதி லலிதா, அபிவர்னேஷ், ராகவனேஷ், விலாஷினி. படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

கொவிட் சூழ­லி­லும் சிங்­கப்­பூ­ரில் நேற்று தமிழர்கள் பொங்­கல் வைத்து உழ­வர் திரு­நா­ளைக் கொண்­டா­டி­னர். சிரம காலம் நீங்கி வாழ்­வில் மகிழ்ச்சி பொங்க வேண்­டும் என வீடு­க­ளி­லும் கோயில்­க­ளி­லும் பொங்­கல் பொங்கி கட­வுளை வேண்­டி­னர்.

பொது­மக்­க­ளு­டன் பொங்­கல் வைத்த வழி­பாட்­டுத் தலங்­களில் ஒன்­றான புனித மரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணியர் ஆல­யத்­தில் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் மக்­கள் பொங்­கல் பொங்­கி­னர்.

மூன்­றா­ம் கட்டத் தளர்­வைத் தொடர்ந்து ஆல­யத்­தில் 150 பேர் வரை கூட­அ­னு­மதி இருந்­தா­லும் கட்­டுப்­பா­டு­கள் ஆல­யத்­தில் தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஆல­யத்­தின் செய­லா­ளர் எ. அண்­ணா­துரை தெரி­வித்­தார்.

எளி­மை­யான அத்­தி­யா­வ­சிய வழி­பா­டு­கள் மட்­டுமே நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போது கோயி­லுக்கு சுதந்­தி­ர­மாக செல்ல முடி­வ­தில் மகிழ்ச்சி அடைந்த 81 வயது துரை­சிங்­கம் சிங்­கப்­பூரை நோய்ப் பர­வ­லில் இருந்து பாது­காத்து வரும் அனை­வ­ருக்­கும் இதற்கு நன்­றி­கூற வேண்­டும் என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் நிரந்­த­ர­வா­சம் பெற்­றுள்ள மலே­சி­யர் திரு விக்­னேஷ்­வன், மூன்­றாம் கட்­டத் தளர்வு நட­வ­டிக்­கை­யில் பொங்­கல் கொண்­டா­டு­வது ஓர­ளவு நிம்­ம­தியை­யைத் தந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

ஓராண்­டுக்கு மேல் பெற்­றோ­ரைப் பார்க்­கா­மல் இருப்­பது கவலை அளித்­தா­லும் சிங்­கப்­பூ­ரின் சிறந்த நிர்­வா­கம் ஆறு­த­லை­யும் நிம்­ம­தி­யும் தரு­கிறது என்­ற­னர் ஜோகூ­ரைச் சேர்ந்த திரு விக்­னேஷ்­வ­ரன், 40, அவ­ரது மனைவி திரு தீபா 38 இரு­வ­ரும்.

"கிரு­மிப்­ ப­ர­வ­லால் உல­க­ள­வில் மாண­வர்­களின் கல்வி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் சிங்­கப்­பூ­ரில் மாண­வர்­கள் நல்ல நிலை­மை­யில் இருப்­ப­தாக அண்மைய 'ஓ' நிலைத் தேர்­வு முடிவுகள் காட்­டு­கின்­றன," என்றனர் அவர்­கள்.

பொங்­கலை வீட்­டில் கொண்­டா­டு­வ­து­டன் சமூ­கத்­தி­ன­ரு­டன் கொண்­டா­டு­வது உற்­சா­கம் தரு­வ­தாக பயிற்­று­விப்­பா­ளர் சுமித்ரி பழனி­நா­தன், 50, தெரி­வித்­தார்.

"இத்­த­கைய விழாக்­கா­லங்­க­ளின்­போது சமூ­கத்­தைப் பற்­றிய சிந்­த­னையை வளர்த்­துக்­கொள்­ள­லாம். வசதி குறைந்­தோ­ருக்கு எப்படி உதவி செய்­ய­லாம் என்­பது பற்­றி­யும் எண்ணிப் பார்க்கலாம்," என்று அவர் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் தங்­க­ளது குடும்­பத்­தை­விட்டு இங்கு வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் பணிப்­பெண்­க­ளுக்­கும் இந்­தப் பொங்­கல் நிம்­ம­தி­யைத் தர­வேண்­டும் என்று 37 வயது பணிப்­பெண் கலை­வாணி கூறி­னார்.

வியா­ழக்­கி­ழ­மை­தோ­றும் கோயி­லுக்­குச் செல்­வ­தா­கக் கூறும் மேற்பார்­வை­யா­ளர் இளங்­கோ­வன், 45, இவ்­வாண்டு தமது பிள்­ளை­க­ளின் படிப்­பி­லேயே தமது முழுக் கவ­ன­மும் இருப்­ப­தா­கக் கூறி­னார்.

கிரு­மிப்­ ப­ர­வ­லால் பலர் துன்­பத்­திற்கு உள்­ளாகி இருப்­ப­தால் விரை­வில் வழக்­க­நிலை திரும்புவதை விரும்­பு­வ­தாக இயந்­திர உற்­பத்தி பணி­யா­ளரான 23 வயது கீதா தெரி­வித்­தார்.

பல்­வேறு கார­ணங்­க­ளால் மன உளைச்சல் நிறைந்த உள்­ளங்­கள் இந்த நல்ல நாளில் நிம்­ம­தி­யைப் பெற­வேண்­டும் என்­பது சொந்­தத் தொழில் செய்­யும் 45 வயது அன்­பின் பொங்­கல் வேண்­டு­தல்.