சிங்டெல் நிறுவனத்துக்குச் சேவை வழங்கும் நிறுவனத்தின் தகவல் பகிர்வு முறை ஊடுருவப்பட்டது

சிங்டெல் நிறுவனத்துக்குச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் தகவல் பகிர்வு முறை ஊடுருவப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் பகிர்வு முறை ஊடுவருவப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்ய சிங்டெல் விசாரணை நடத்தி வருகிறது.

“சில வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட விவரங்கள் களவாடப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு ஆதரவு வழங்கவும் இடர்களை நிர்வகிக்கவும் முன்னுரிமை தரப்படும்.

“எந்தெந்த தகவல்கள் களவாடப்பட்டன என்பதை அடையாளம் கண்டவுடன் அவர்களுடன் உடனடியாக தொடர்புகொள்வோம்,” என்று சிங்டெல் தெரிவித்தது.

கிளவுட் பகர்வு நிறுவனமான அஸ்ஸெல்லியன் வழங்கும் எஃப்டிஏ தகவல் பகிர்வு முறை ஊடுருவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஊடுருவல் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று சிங்டெலிடம் அந்த நிறுவனம் தெரிவித்தது.

எஃப்டிஏ தகவல் பகிர்வு முறை கடந்த 20 ஆண்டு காலமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அது திட்டமிட்டு ஊடுருவப்பட்டிருப்பதாகவும் அஸ்ஸெல்லியன் நிறுவனம் கூறியது.

தனக்குச் சேவை வழங்கும் எஃப்டிஏ நிறுவனத்தின் தகவல் பகிர்வு முறை மட்டுமே ஊடுருவப்பட்டிருப்பதாகவும் தனக்குச் சொந்தமான மையக் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும் அது பாதுகாப்பாக இருப்பதாகவும் சிங்டெல் தெரிவித்தது.

சிங்டெலின் பல்வேறு பிரிவுகளுடனும் மற்ற பங்குதாரர்களுடனும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இந்த எஃப்டிஏ தகவல் பகிர்வு முறை பயன்படுத்தப்படுவதாக சிங்டெல் தெரிவித்தது.

“ஊடுருவல் பற்றி தெரியவந்தவுடன் அதைப் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். ஊடுருவல் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம். இது தொடர்பாக இணையப் பாதுகாப்பு நிபுணர்களுடனும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை உட்பட தொடர்புடைய ஏனைய அமைப்புகளுடனும் மிக அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்,” என்று சிங்டெல் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!