வீட்டிலிருந்தபடி கால்நடை மருத்துவ சேவை

கால்நடை பரா­ம­ரிப்பு நிலை­யம் ஒன்­றில் பகுதி நேர கால்­நடை மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்றி வந்­த­வர் டாக்­டர் கி.ஜன­னி­பி­ரியா, 29.

சிங்கப்­பூ­ரில் கடந்த ஆண்டு தொடங்­கிய கொவிட்-19 நோய்ப் பர­வல் இவ­ரது பணி­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தது.

கடந்த ஆண்டு ஏப்­ரல், மே மாதங்­களில் நோய்ப் பர­வல் முறி­யடிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது தமது பகுதி நேர வேலை பாதிப்­ப­டைந்த சூழ­லில், தொலைத்­தொ­டர்பு வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி கால்­நடை மருத்­து­வச் சேவை­யைத் தொடங்­கி­னார்.

‘ஸும்­வெட்’ எனப்­படும் தொலைத்­தொ­டர்பு கால்­நடை பரி­சோ­த­னைத் தளத்­தில் கடந்த ஆண்டு ஏப்­ர­லில் டாக்­டர் ஜனனி சேர்ந்­தார். இந்­தத் தளத்­தில் தற்­போது பணி­யாற்­றி­வ­ரும் 28 கால்­நடை மருத்­து­வர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

இந்­தத் தளத்­தில் ‘டெலி கன்­சல்ட்’ எனும் காணொ­ளிக் காட்சி வழி­யாக கால்­நடை மருத்­து­வர்­கள் கால்­ந­டை­க­ளைப் பரி­சோ­திப்­பர்.

நோய் அறி­கு­றி­கள், உண­வு­முறை, வாழ்க்­கை­முறை, கடந்­த­கால மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் போன்­ற­வற்றை அறிந்­து­கொண்டு கால்­நடை­க­ளின் தேவை­களை அறிய முற்­ப­டு­வர்.

இணை­யக் காணொளி வழி­யாக செய்­யப்­படும் ஒவ்­வோர் ஆலோ­சனை­யும் கிட்­டத்­தட்ட 15 நிமி­டங்­கள் நீடிக்­கும். நேர­டி­யாக கால்­நடை மருந்­த­கத்­தில் எடுக்­கப்­படும் நேரத்­தை­விட இது குறைவு என்­கி­றார் இத்­து­றை­யில் கிட்­டத்­தட்ட நான்கு ஆண்­டு­கால அனு­ப­வம் கொண்­ட டாக்­டர் ஜனனி.

தோல், காது, நட­மாட்­டப் பிரச்­சினை, சிராய்ப்­புக் காயங்­கள், சோம்­பல், வயிற்­றுப்­போக்கு, மலச்­சிக்­கல் உள்­ளிட்ட பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்கு மருத்­து­வக் குறிப்­பு­களை மருத்­து­வர்­கள் வழங்­கு­வர். மருந்து தேவைப்­பட்­டால் அவை நேர­டி­யாக வீட்­டிற்கு விநி­யோ­கம் செய்­யப்­படும்.

வீட்­டி­லி­ருந்து பணி­பு­ரி­யும் டாக்டர் ஜன­னிக்கு காணொ­ளி வழி ஆலோ­சனை வழங்­கு­வ­தில் சில கட்­டுப்­பா­டு­களும் உண்டு. பொது­வாக கால்­நடை மருந்­த­கங்­களில் உள்ள பல­வி­த­மான மருத்­து­வச் சாத­னங்­கள் இவ­ரது வீட்­டில் இருக்­காது.

“எனவே எங்­க­ளது தொழில்­நுட்ப ஆத­ர­வுக் குழு­வு­டன் சேர்ந்து கால்­ந­டை­களை நாங்­கள் கவ­னத்­து­டன் ஆரா­ய­வேண்­டும்,” என்று அவர் கூறி­னார்.

நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது கால்­நடை மருந்­த­கங்­கள் செயல்­ப­டு­வதற்கு அனு­மதி கொடுக்­கப்­பட்டு இருந்­த­போ­தும் அவ­ச­ரத் தேவைக்கு மட்­டும்­தான் கால்­ந­டை­கள் அங்கு கொண்டு செல்­லப்­ப­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

இந்­தத் தொலைத்­தொ­டர்­புச் சேவை­யின் மூலம் கால்­ந­டை­களுக்கு மருத்­துவ ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­வது, நீட்­டிக்­கப்­பட்ட சேவை நேரம், நேர­டி­யாக வீடு­களுக்கு மருந்து விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­வது போன்ற அம்­சங்­கள் கால்­நடை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு சௌக­ரி­யம் தரு­வ­தாக டாக்­டர் ஜனனி கூறு­கி­றார்.

“பிரச்­சி­னை­கள் முற்­று­வ­தற்கு முன்­னரே சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு குறித்த சந்­தே­கங்­க­ளைக் களை­வதற்­கான தள­மாக இது உள்­ளது,” என்ற இவர், தாம் மருந்­த­கத்­தில் வேலை பார்த்­த­போது தமக்கு மனச்­சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வங்­களை நினை­வு­கூர்ந்­தார்.

“கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்ட பிரா­ணி­கள், கடைசி நேரத்­தில் மருந்­த­கத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்டு எங்­க­ளால் அவற்­றைக் காப்­பாற்ற இய­லா­மல் போன­தைக் கண்டு வேதனை அடைந்­தி­ருக்­கி­றேன். தொலைத்­தொ­டர்பு மருத்­துவ ஆலோ­சனை முறை­யைச் செல்­லப்­பி­ராணி உரி­மை­யா­ளர்­கள் தொடக்­கத்­தி­லேயே பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தால் அவற்றைக் காப்­பாற்றி இருக்­க­லாம்,” என்று அவர் கூறி­னார்.

‘ஸும்­வெட்’ தளம் மட்­டு­மின்றி ‘பிஏ­விசி’, ’வெட்­பேல்’ போன்ற தளங்­களும் இவ்­வாறு இணை­யம் வழி­யாக கால்­ந­டை­க­ளுக்கு மருத்­துவ ஆலோ­ச­னையை இங்கு வழங்­கு­கின்­றன.

அமெ­ரிக்­கா­வின் கம்­மிங்ஸ் மருத்­து­வ­மனை நடத்­திய ஆய்வு ஒன்­றில், பெரும்­பா­லான செல்­லப்­பி­ராணி உரி­மை­யா­ளர்­கள் இத்­த­கைய தொலைத்­தொ­டர்பு மருத்­து­வச் சேவை­யைப் பயன்­ப­டுத்த விரும்­பு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இத்­த­கைய வச­தி­க­ளின் மூலம் தங்­க­ளது செல்­லப்­பி­ரா­ணி­க­ளின் உடல்­ந­லத்­தைப் பேணிக் காக்க முடி­யும் என அந்த ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

இருந்­த­போ­தும், செல்­லப்­பி­ராணி உரி­மை­யா­ளர்­களில் சிலர், இந்தச் ­சேவை குறித்த ஐயங்­களை வெளிப்­ப­டுத்­தி­னர்.

“செல்­லப்­பி­ரா­ணியை நேரில் காணா­மல் காணொளி மூலம் அதன் தேவை­களை மருத்­து­வ­ரால் முழு­மை­யாக புரிந்­து­கொள்ள முடி­யுமா என்­பது தெரி­ய­வில்லை,” என்று தக­வல் தொழில்­நுட்ப நிர்வா­கி­யான சரண்யா இளங்­கோ­வன், 29, தெரி­வித்­தார்.

ஆனால், ‘ஸும்­வெட்’ தளத்­திற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ள­தால் அதைப் பயன்­ப­டுத்­து­வ­தில் தமக்கு தயக்­கம் எது­வு­மில்லை என்று ஆசி­ரி­யர் திவானா பிள்ளை, 35, கூறி­னார்.

அவ­சர மருத்­துவ உதவி தேவைப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு மட்­டுமே இந்­தச் சேவை­யைப் பயன்­ப­டுத்த தாம் தயா­ராக இருப்­பதாக முத­லீட்டு வங்கி ஒன்­றின் நிர்­வா­கி­யான கும­ரே­சன் சுப்­ர­ம­ணி­யம், 33, கூறி­னார்.

செல்­லப்­பி­ராணி உரி­மை­யா­ளர்­க­ளின் சந்­தே­கங்­க­ளைத் தம்­மால் புரிந்­து­கொள்ள முடி­வ­தா­கக் கூறிய டாக்­டர் ஜனனி, இந்­தத் தொலைத்­தொ­டர்­புச் சேவை, பொது­வாக மருந்­த­கத்­தில் வழங்­கப்­படும் ஆலோ­ச­னைக்கு மாற்று வழி அல்ல என்று வலி­யு­றுத்­தி­னார்.

“மருந்­த­கத்­திற்­குச் செல்ல வேண்­டுமா வேண்­டாமா என்ற முடிவை செல்­லப்­பி­ராணி உரி­மை­யா­ளர்­கள் எடுக்க உத­வும் ஆலோ­ச­னையை நாங்­கள் வழங்­கு­கி­றோம். எந்­தெந்த சூழ்­நி­லை­யில் காத்­து இ­ருக்­க­லாம், எப்­போது அவ­சர மருத்­துவ உதவி தேவை என்­பதை நாங்­கள் ஆராய்ந்து சரி­யான ஆலோ­ச­னையை வழங்­கு­கி­றோம்,” என்று இவர் கூறி­னார்.

அத்­து­டன், பல கார­ணங்­க­ளால் கால்­நடை மருந்­த­கங்­க­ளுக்­கு தங்கள் செல்­லப்­பி­ரா­ணி­க­ளைக் கொண்டு செல்ல இய­லா­த­போது தொலைத்­தொ­டர்பு ஆலோ­சனை முறை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு கைகொ­டுப்­ப­தா­க­வும் டாக்­டர் ஜனனி சொன்­னார்.

2019ஆம் ஆண்டு அக்­டோ­ப­ரில் தொடங்­கப்­பட்ட ‘ஸும்­வெட்’ தளம், முத­லில் சிங்­கப்­பூ­ரில் மட்­டும் செயல்­பட்டு வந்­தது. தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் மேலும் பல நாடு­க­ளுக்கு அது தனது சேவையை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

“ஹாங்­காங், மலே­சியா, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து ஆகிய நாடு­க­ளி­லும் ஸும்­வெட் இயங்­கு­கிறது,” என்­று ஸும்­வெட் தளத்­தின் நிறு­வ­னர் அத்­தினா லீ தெரி­வித்­தார்.

கொவிட்-19 முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது ‘ஸும்­வெட்’ தளத்­தைப் பயன்­ப­டுத்­தி­யோரின் எண்­ணிக்கை கூடி­ய­தால் வர்த்­த­கம் 60 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக டாக்­டர் லீ கூறி­னார்.

ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் மேல்­நி­லைத் தேர்வை முடித்த பின்­னர் நியூ­சி­லாந்­தின் மெஸ்ஸி பல்­கலைக்­க­ழ­கத்­தில் இருந்து 2016ஆம் ஆண்டு பட்­டம் பெற்ற டாக்­டர் ஜனனி, சிங்­கப்­பூ­ரில் தமது வாழ்க்­கைத் தொழி­லைத் தொடங்க விரும்­பி­னார்.

“சிங்­கப்­பூர் மருத்­து­வர் என்று எனக்­குக் கிடைத்த அடை­யா­ளம் எனது நம்­ப­கத்­தன்­மை­யைக் கூட்­டி­யது. எனவே, சிங்­கப்­பூ­ரில் எனக்­கான நல்ல அடித்­த­ளத்தை உரு­வாக்­கிய பின்­னர் வெளி­நா­டு­களிலும் முத்­திரை பதிக்க விரும்பு­கிறேன்,” என்­றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!