சிங்கப்பூரில் சட்ட விரோத கார்ப்பந்தயம் அதிகம் நடைபெறும் ஐந்து இடங்கள்

தஞ்சோங் பகாரில் ஐந்து பேர் உயிரிழந்த கார் விபத்து, சாலை பாதுகாப்பு பற்றிய தேசிய அளவிலான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது.

சாலை வளைவு அருகே மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் விரைந்து சென்றதாக போலிசார் நம்புகிறது. இந்த வட்டாரத்தில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் விரைந்து செல்லும் கார்களைத் தொல்லையாக வட்டாரவாசிகள் வருணித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வரம்புக்கு மீறி வேகமாக ஓட்டும் குற்றம், வாகனமோட்டிகள் அதிகம் செய்யும் குற்றம் என்று போக்குவரத்து போலிஸ், சன்டே டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தது.

1.காலாங்-பாயா லேபார் விரைவுச்சாலை (கேபிஇ) மே 2020

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் குறைந்தது ஒன்பது கார்கள் சென்றதை கார் ஒன்றில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று காட்டியதை அடுத்து இருபது வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு ஆடவர்களும் இரண்டு பெண்களும் பிடிப்பட்டனர்.

2. துவாஸ் சவுத் போல்வார், மார்ச் 2020

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் வட்டாரத்தில் 57 வாகனமோட்டிகள் சட்டவிரோதமான கார்ப்பந்தயத்தில் பங்கேற்றதற்காக விசாரிக்கப்பட்டனர்.

3.சென்ட்ரல் விரைவுச்சாலை (சிடிஇ), 2018

சிடிஇ விரைவுச்சாலையில் மிட்சுபிஷி ‘எவலுஷன் 10’ கார்களை 39 வயது ஆடவரும் 27 வயது ஆடவரும் பலமுறை தடம்மாறி ஓட்டிக்கொண்டிருந்தனர். அதிகபட்சமாக மணிக்கு 90 கீமி வரையில்தான் செல்ல அனுமதிக்கப்படும அந்தச் சாலையில் ஒருவர் மணிக்கு 184 கிலோமீட்டர் வேகத்திலும் மற்றொருவர் 178 கிலோமீட்டர் வேகத்திலும் ஓட்டினர்.

4. லிம் சூ காங் ரோடு, 2018

இந்தச் சாலையில் இருவர் தங்களது வோல்க்ஸ்வேகன் ஜிடிஐ கார்களை மணிக்கு 136 வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தனர்.

5. சிலேத்தார் லிங், 2015

மணிக்கு அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் இரண்டு ஆடவர்கள் தங்களது கார்களை மணிக்கு 219 கிலோமீட்டர் வேகம் வரை ஓட்டினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!